வாகன சோதனையை போலீஸ் ஜ.ஜி. ஆய்வு


வாகன சோதனையை போலீஸ் ஜ.ஜி. ஆய்வு
x
தினத்தந்தி 7 April 2019 10:30 PM GMT (Updated: 2019-04-08T02:10:10+05:30)

பெரம்பலூர், சிதம்பரம், கரூர், திருச்சி ஆகிய 4 நாடாளுமன்ற தொகுதியின் போலீஸ் மேற்பார்வையாளரான ஐ.ஜி. தேவராஜ் ஆய்வு செய்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

தோகைமலை,

நாடாளுமன்ற தேர்தல் வருகிற 18-ந்தேதி நடக்கிறது. இதையொட்டி தமிழகம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் உள்ளது. பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட கிருஷ்ணராயபுரம், குளித்தலை, தோகைமலை ஒன்றிய பகுதிகளில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் 24 மணி நேரமும் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் தோகைமலை பகுதியில் உள்ள சோதனைசாவடியில் பறக்கும் படை அலுவலர் குமார் தலைமையில் அதிகாரிகள் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். இந்தபணிகளை பெரம்பலூர், சிதம்பரம், கரூர், திருச்சி ஆகிய 4 நாடாளுமன்ற தொகுதியின் போலீஸ் மேற்பார்வையாளரான ஐ.ஜி. தேவராஜ் ஆய்வு செய்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். 

Next Story