தேனி அருகே கோர விபத்து: வேன் மீது பஸ் பயங்கர மோதல், அண்ணன்- தம்பி உள்பட 6 பேர் பலி
தேனி அருகே வேன் மீது பஸ் பயங்கரமாக மோதிய விபத்தில் வளைகாப்பு நிகழ்ச்சிக்கு சென்று திரும்பிய அண்ணன், தம்பி உள்பட 6 பேர் பலியானார்கள்.
தேனி,
தேனி கோட்டைக்களம் தெருவை சேர்ந்தவர் வெற்றியரசன் (வயது 50). இவருடைய மகள் பவித்ரா (28). இவருக்கும் போடி கிழக்கு தெருவை சேர்ந்த விவேகானந்தன் என்பவருக்கும் திருமணமாகி 3 வயதில் யாசிகா என்ற பெண் குழந்தை உள்ளது. இந்தநிலையில், பவித்ரா மீண்டும் கர்ப்பம் அடைந்தார். 7 மாத கர்ப்பிணியாக இருந்த அவருக்கு நேற்று போடியில் வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது.
இதற்காக வெற்றியரசன் தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் ஒரு வேனில் போடிக்கு சென்றார். வேனை பூதிப்புரத்தை சேர்ந்த முருகதாஸ் மகன் செல்வக்குமார் (23) ஓட்டினார்.
வளைகாப்பு நிகழ்ச்சி முடிந்தவுடன், கர்ப்பிணியான பவித்ராவை அழைத்துக் கொண்டு வெற்றியரசனின் குடும்பத்தினரும், உறவினர்களும் வேனில் தேனிக்கு திரும்பி வந்து கொண்டு இருந்தனர். போடி-தேனி சாலையில், கோடாங்கிபட்டி அருகே தீர்த்தத்தொட்டி கோவிலை கடந்து வந்த போது, எதிரே தேனியில் இருந்து போடி நோக்கி ஒரு தனியார் பஸ் அசுர வேகத்தில் வந்து கொண்டு இருந்தது.
அப்போது கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த தனியார் பஸ், வேன் மீது மோதியது. இதில் வேனின் முன் பகுதி அப்பளம் போல் நொறுங்கி கவிழ்ந்தது. இந்த கோர விபத்தில் வேனில் பயணம் செய்த வெற்றியரசன், அவருடைய அண்ணன் சிற்றரசன் (55), உறவினர்களான தேனி கோட்டைக்களத்தை சேர்ந்த வீராச்சாமி மனைவி சரஸ்வதி (65), பால்சாமிதேவர் மனைவி பேச்சியம்மாள் (65) ஆகிய 4 பேரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
வேனில் பயணம் செய்த பலர் பலத்த காயம் அடைந்தனர். இதுகுறித்த தகவல் அறிந்ததும் பழனிசெட்டிபட்டி, போடி பகுதிகளில் இருந்து போலீசாரும், தீயணைப்பு மற்றும் மீட்பு படை வீரர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். வேனுக்குள் காயங்களுடன் சிக்கி இருந்தவர்களை அவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்தில் பவித்ரா, அவருடைய மகள் யாசிகா (3), வெற்றியரசனின் மனைவி கவிதா (42), மகன் விஜயகுமார் (23), சிற்றரசனின் மனைவி பாக்கியம் (40), வேன் டிரைவர் செல்வக்குமார், போடி சந்தனமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சக்கையா மனைவி சுருளியம்மாள் (65), அல்லிநகரத்தை சேர்ந்த மாயி மனைவி கருப்பாயி (45), கருப்பையா மனைவி காளியம்மாள் (46), ஜெகநாதன் மனைவி ராஜேஸ்வரி (42), மதுரை பொன்மேனி தெருவை சேர்ந்த முத்துப்பாண்டி மனைவி லதா (36), மதுரையை சேர்ந்த ஜெயப்பிரகாஷ் மனைவி சுபா (34), அவருடைய மகள்கள் லீட்டா (10), நித்திசா (6), அல்லிநகரத்தை சேர்ந்த பெரியமாயன் மனைவி கலாவதி (45) ஆகிய 15 பேர் பலத்த காயம் அடைந்தனர். இவர்களுக்கு தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில், லீட்டா. சுருளியம்மாள் ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால், பலி எண்ணிக்கை 6 ஆக அதிகரித்தது.
விபத்தை ஏற்படுத்திய தனியார் பஸ்சை, சின்னமனூர் அருகே உள்ள முத்துலாபுரத்தை சேர்ந்த கண்ணன் (35) என்பவர் ஓட்டி வந்தார். விபத்து நடந்தவுடன் அவர் பஸ்சில் இருந்து இறங்கி தப்பி ஓடிவிட்டார். பின்னர், அவர் பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து டிரைவர் கண்ணனை கைது செய்தனர்.
விபத்து நடந்ததை அறிந்ததும் அருகில் உள்ள கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் அங்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் ஆத்திரம் அடைந்து, விபத்தை ஏற்படுத்திய பஸ் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர். அப்போது அங்கு வந்த போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் மற்றும் போலீசார் பஸ் கண்ணாடியை உடைத்ததாக வாலிபர் ஒருவரை மடக்கிப் பிடித்து போலீஸ் வேனில் ஏற்ற முயன்றனர். இதையடுத்து பொதுமக்கள் போலீஸ் சூப்பிரண்டுடன் வாக்குவாதம் செய்ததோடு, அந்த வாலிபரை அவரிடம் இருந்து மீட்க முயன்றனர். பின்னர் அவரை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.

Related Tags :
Next Story