மாவட்ட செய்திகள்

நாகர்கோவில் அருகே துணிகரம் வியாபாரி வீட்டில் 20 பவுன் நகை கொள்ளை + "||" + 20-pound jewelry robbery at the home of a businessman near the Nagercoil

நாகர்கோவில் அருகே துணிகரம் வியாபாரி வீட்டில் 20 பவுன் நகை கொள்ளை

நாகர்கோவில் அருகே துணிகரம் வியாபாரி வீட்டில் 20 பவுன் நகை கொள்ளை
நாகர்கோவில் அருகே வியாபாரி வீட்டில் பூட்டை உடைத்து 20 பவுன் நகையை மர்மநபர்கள் கொள்ளை அடித்துச் சென்றனர்.
ராஜாக்கமங்கலம்,

குந்தன்கோடு அருகே கொல்லமாவடி பகுதியை சேர்ந்தவர் குமரேசன் (வயது 43). இவர் பழைய கார்களை வாங்கி விற்பனை செய்யும் வியாபாரி ஆவார். குமரேசன் தற்போது, நாகர்கோவில் அருகே தம்மத்துக்கோணம் குமரி கார்டன் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து குடும்பத்துடன் வசித்து வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு குமரேசன், தனது மனைவியை கொல்லமாவடியில் உள்ள பூர்வீக வீட்டில் விட்டு விட்டு வந்தார். பின்னர், குமரி கார்டன் வீட்டை பூட்டி விட்டு மதுரைக்கு புறப்பட்டு சென்றார்.


நேற்று காலை வீடு திரும் பிய அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, அங்கு பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தன. மேலும், படுக்கை அறை பீரோவில் இருந்த 20 பவுன் நகையும் கொள்ளை போயிருந்தது.

இதுகுறித்து ராஜாக்கமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். மேலும், கன்னியாகுமரி துணை போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.

விசாரணையில், குமரேசன் வெளியூர் சென்றதை நோட்டமிட்ட மர்ம நபர்கள், வீட்டின் கதவை உடைத்து அங்கு இருந்த சாவி மூலம் பீரோவை திறந்து நகையை கொள்ளை அடித்து சென்றது தெரியவந்தது. கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவாகியிருந்த ரேகைகளை பதிவு செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடிவருகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. திண்டிவனம் அருகே, மேளக்காரர் வீட்டில் ரூ.8 லட்சம் நகை-பணம் கொள்ளை - மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
திண்டிவனம் அருகே மேளக்காரர் வீட்டின் கதவை உடைத்து ரூ.8 லட்சம் நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
2. விருதுநகரில் கல்வி அதிகாரி வீட்டில் கொள்ளையடித்த வாலிபர் கைது
விருதுநகரில் கல்வி அதிகாரி வீட்டில் கொள்ளையடித்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
3. கோவையில், எலெக்டிரிக்கல் கடையில் ரூ.2½ லட்சம் கொள்ளை - 2 வீடுகளில் 35 பவுன் நகை திருட்டு
கோவையில் எலெக்டிரிக்கல் கடையின் ஷட்டரை உடைத்து ரூ.2½ லட்சத்தையும், கல்லூரி பேராசிரியர் வீடு உள்பட 2 பேரின் வீடுகளில் 35 பவுன் நகையையும் மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றனர்.
4. திருப்பத்தூர் அருகே, பூட்டிய வீட்டில் ரூ.10 லட்சம் நகை, பணம் கொள்ளை - தொடர் சம்பவத்தால் மக்கள் பீதி
திருப்பத்தூர் அருகே பூட்டிய வீட்டில் ரூ.10 லட்சம் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டது. தொடர் சம்பவத்தால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.
5. காரிமங்கலம் அருகே, சென்னகேசவ பெருமாள் கோவில் உண்டியலை உடைத்து நகை, பணம் திருட்டு
காரிமங்கலம் அருகே சென்னகேசவ பெருமாள் கோவில் உண்டியலை உடைத்து மர்ம நபர்கள் நகை, பணத்தை திருடிச்சென்றனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

அதிகம் வாசிக்கப்பட்டவை