பா.ஜனதா-அ.தி.மு.க. கூட்டணிக்கு கிராம கோவில் பூசாரிகள் பேரவை ஆதரவு பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம்
பா.ஜனதா-அ.தி.மு.க. கூட்டணிக்கு கிராம கோவில் பூசாரிகள் பேரவை ஆதரவு தெரிவித்து பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஸ்ரீரங்கம்,
தமிழ்நாடு விசுவ இந்து பரிஷத், கிராம கோவில் பூசாரிகள் பேரவை, பூக்கட்டுவோர் பேரவை மற்றும் அருள்வாக்கு அருள்வோர் பேரவை ஆகியவற்றின் மாநில பொதுக்குழு கூட்டம் ஸ்ரீரங்கத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு தமிழ்நாடு விசுவ இந்து பரிஷத், கிராம கோவில் பூசாரிகள் பேரவை நிறுவன தலைவர் வேதாந்தம் தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் ஆர்.ஆர்.கோபால்ஜி முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் கிராம கோவில் பூசாரிகளுக்கு மாத ஊக்கத்தொகை வழங்குவதோடு நலவாரிய சலுகைகள் தொடர்ந்து வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாவட்ட, மாநில நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
பா.ஜனதா-அ.தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு
பின்னர், வேதாந்தம் நிருபர்களிடம் கூறியதாவது:-
கி.வீரமணி, இந்து கடவுள்களை தொடர்ந்து விமர்சித்து பேசி வருகிறார். அவர் மீது போலீசார் வழக்கு பதிந்து கைது செய்ய வேண்டும்.
மோடி, மீண்டும் பிரதமராக கூடாது என்று சிறுபான்மையினர் பிரசாரம் செய்து வருகின்றனர். இந்த நேரத்தில் மோடிக்கு நாம் ஆதரவு தெரிவிக்க வேண்டும். எனவே இந்த பொதுக்குழுவில் மோடி தலைமையிலான பா.ஜனதா கட்சி-அ.தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பதுடன் பிரசாரத்தில் ஈடுபட்டு மோடியை வெற்றிப்பெற செய்வது என்று தீர்மானித்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story