பா.ஜ.க. அரசு ஊழல் புதை மண்ணில் சிக்கியுள்ளது: வைகோ பேச்சு


பா.ஜ.க. அரசு ஊழல் புதை மண்ணில் சிக்கியுள்ளது: வைகோ பேச்சு
x
தினத்தந்தி 8 April 2019 4:30 AM IST (Updated: 8 April 2019 3:59 AM IST)
t-max-icont-min-icon

பா.ஜனதா அரசு ஊழல் புதை மண்ணில் சிக்கியுள்ளது என்று வைகோ கூறினார்.

உசிலம்பட்டி,

தேனி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட உசிலம்பட்டியில், அத்தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

ரூ.2 லட்சத்து 42 ஆயிரம் கோடியை கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு தள்ளுபடி செய்த மோடி அரசு, விவசாய கடனை மட்டும் தள்ளுபடி செய்ய மறுக்கிறது. அவரின் நோக்கம் நம் நாட்டு மக்களின் முன்னேற்றம் அல்ல. மாறாக வெளிநாடுகளை சேர்ந்த கார்ப்பரேட் கம்பெனியின் வளர்ச்சிக்கு தான் முக்கியத்துவம் கொடுப்பார். இந்த அரசு ஊழல் புதை மண்ணில் சிக்கி உள்ளது.

மேலும் தமிழ்நாட்டில் கஜா புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் கூறவில்லை. கஜா புயலால் பாதிக்கப்பட்டது குறித்து கண்டுகொள்ளவும் இல்லை. மோடிக்கு வாக்களித்தால் தற்போது போடி அருகே பொட்டிபுரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நியூட்டிரினோ திட்டத்தை மீண்டும் கையில் எடுத்து அப்பகுதி மக்களின் அழிவிற்கு வழி வகுப்பார் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story