என்.ஐ.டி. கல்லூரியில் பேராசிரியர் பணி


என்.ஐ.டி. கல்லூரியில் பேராசிரியர் பணி
x
தினத்தந்தி 8 April 2019 7:07 AM GMT (Updated: 2019-04-08T12:37:54+05:30)

என்.ஐ.டி. கல்லூரியில் பேராசிரியர் பணி 224 காலியிடங்கள்

தேசிய தொழில்நுட்ப கல்வி மையம் சுருக்கமாக என்.ஐ.டி. எனப்படுகிறது. தற்போது ஒடிசா மாநிலம் ரூர்கேலாவில் உள்ள என்.ஐ.டி. கல்வி மையத்தில் உதவி பேராசிரியர், இணை பேராசிரியர், பேராசிரியர் போன்ற பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 177 பேர் தேர்வு செய்யப்படு கிறார்கள். என்ஜினீயரிங், ஆர்கிடெக்சர், சயின்ஸ், ஹியுமனிட்டிஸ் மற்றும் மேனேஜ்மென்ட் போன்ற பிரிவில் பணியிடங்கள் உள்ளன.

பி.இ., பி.டெக். படிப்புடன் முனைவர் பட்டம் பெற்றவர்கள், எம்.ஆர்க் படித்தவர்கள், இதர முதுநிலை படிப்புகளுடன், முனைவர் பட்டம் பெற்றவர்கள், எம்.பி.ஏ., படிப்புடன் மேனேஜ்மென்ட் படிப்பில் பி.எச்.டி. படித்தவர்கள் இந்த பணியிடங் களுக்கு விண்ணப்பிக்கலாம்.

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளத்தில் முழுமையான விவரங்களை பார்த்து அறிந்து கொண்டு விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். இந்த பணிக்கு விண்ணப்பிக்க கடைசிநாள் 30-4-2019-ந் தேதியாகும்.

மற்றொரு அறிவிப்பின்படி பின்னடைவுப் பணிக்கு 47 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிகளுக்கும் பணியிடங்கள் உள்ள பாடப்பிரிவில் முனைவர் பட்டம் பெற்று குறிப்பிட்ட பணி அனுபவம் உள்ளவர்கள் ஏப்ரல் 30-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

இவை பற்றிய விவரங்களை nitrkl.ac.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.


Next Story