ஸ்டேட் வங்கியில் 2000 புரபெசனரி அதிகாரி பணிகள்
பட்டதாரிகள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
ஸ்டேட் வங்கியில் புரபெசனரி அதிகாரி பணிக்கு 2 ஆயிரம் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பட்டதாரிகள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
இதுபற்றிய விவரம் வருமாறு:-
ஸ்டேட் வங்கி இந்தியாவின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியாகும். ஏராளமான கிளைகளுடன் செயல்படும் இந்த வங்கியில், புரபெசனரி அதிகாரி பணியிடங்களை நிரப்ப தற்போது அறிவிப்பு வெளியாகி உள்ளது.
மொத்தம் 2 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இடஒதுக்கீடு அடிப்படையில் பொதுப் பிரிவுக்கு 810 இடங்களும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 540 இடங்களும், எஸ்.சி. பிரிவின ருக்கு 300 இடங்களும், எஸ்.டி. பிரிவினருக்கு 150 இடங்களும், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 200 இடங்களும் உள்ளன.
இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பு பவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்ப்போம்...
வயது வரம்பு
விண்ணப்பதாரர்கள் 1-4-2019-ந் தேதியில் 21 வயது நிரம்பியவர்களாகவும், 30 வயதுக்கு உட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு மத்திய அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு அனுமதிக்கப்படும்.
கல்வித்தகுதி
அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
கட்டணம்
பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் ஆகியோர் ரூ.750 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.125 செலுத்தி விண்ணப்பித்தால் போதுமானது.
விண்ணப்பிக்கும் முறை
விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். ஏப்ரல் 22-ந்தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். ஹால் டிக்கெட்டுகள் மே மாதம் 3-வது வாரத்தில் பதிவிறக்கம் செய்யலாம். முதல்நிலை ஆன்லைன் தேர்வு, வருகிற ஜூன் 8,9,15,16-ந் தேதிகளில் நடத்தப்படுகிறது. முதல்நிலைத் தேர்வு ஜூலை மாதம் 20-ந்தேதி நடத்தப்படுகிறது. நேர்காணல் செப்டம்பர் மாதத்தில் நடத்த உத்தேசிக்கப்பட்டு உள்ளது.
இதுபற்றிய விரிவான விவரங்களை www.sbi.co.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
Related Tags :
Next Story