அணுமின் நிறுவனத்தில் அதிகாரி வேலை


அணுமின் நிறுவனத்தில் அதிகாரி வேலை
x
தினத்தந்தி 8 April 2019 12:58 PM IST (Updated: 8 April 2019 12:58 PM IST)
t-max-icont-min-icon

அணுமின் நிறுவனத்தில் அதிகாரி வேலை 200 காலியிடங்கள்

அணுமின் நிறுவனத்தில் அதிகாரி பணிக்கு 200 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதுபற்றிய விவரம் வருமாறு:-

இந்திய அணுமின் கழக நிறுவனம் சுருக்கமாக என்.பி.சி.ஐ.எல். (NPCIL) என அழைக்கப் படுகிறது. தற்போது இந்த நிறுவனத்தில் எக்சிகியூட்டிவ் டிரெயினி பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 200 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்...

வயது வரம்பு

பொது மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினர் 26 வயதுக்கு உட் பட்டவர்களாக இருக்க வேண்டும். ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அனுமதிக்கப்படுகிறது. 23-4-2019-ந் தேதியை அடிப்படையாகக் கொண்டு வயது வரம்பு கணக்கிடப்படுகிறது.

கல்வித் தகுதி

பி.இ., பி.டெக், பி.எஸ்சி. என்ஜினீயரிங் படித்தவர்கள், எம்.டெக் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இவர்கள் 2017, 2018, 2019-ம் ஆண்டுகளில் ஏதேனும் ஒரு கேட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும்.

தேர்வு செய்யும் முறை:

தேவையான எண்ணிக்கையிலானவர்கள் நேர்காணலுக்கு அழைக்கப் படுவார்கள். கேட் தேர்வு மதிப்பெண்கள் மற்றும் நேர்காணலில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப் படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணைய தளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். நாளை (9-ந் தேதி) முதல் விண்ணப்பப் பதிவு தொடங்குகிறது. ஏப்ரல் 23-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். இது பற்றிய விவரங்களை www.npcilcareers.co.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
1 More update

Next Story