திருப்பத்தூர் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலைமறியல் போக்குவரத்து பாதிப்பு


திருப்பத்தூர் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலைமறியல் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 9 April 2019 4:15 AM IST (Updated: 8 April 2019 11:02 PM IST)
t-max-icont-min-icon

திருப்பத்தூர் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருப்பத்தூர், 

திருப்பத்தூர் ஒன்றியத்தில் உள்ள பள்ளத்தூர், பூசாரிவட்டம், தலுக்கன்வட்டம் ஆகிய பகுதிகளில் கடந்த சில மாதமாக குடிநீர் பிரச்சினை இருந்து வருகிறது. இதுபற்றி அப்பகுதி மக்கள் ஊராட்சி நிர்வாகம், ஒன்றிய நிர்வாகத்தில் புகார் தெரிவித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் காலிக்குடங்களுடன் நேற்று திருப்பத்தூர் - ஆலங்காயம் மெயின் ரோட்டில் குரிசிலாப்பட்டு என்ற இடத்தில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஒன்றிய அதிகாரிகள், குரிசிலாப்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அதிகாரிகள், ஓரிரு நாட்களில் ஆழ்துளை கிணறு அமைத்து, குடிநீர் பிரச்சினையை சரிெ- சய்து தருவதாக உறுதியளித்தனர். அதைத் தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த சாலை மறியல் காரணமாக அந்த பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story