எஸ்.எஸ்.எல்.சி. சிறப்பு துணை பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் கலெக்டர் சாந்தா தகவல்
எஸ்.எஸ்.எல்.சி. சிறப்பு துணை பொதுத்தேர்வு எழுதவுள்ள தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் சாந்தா தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்டத்தில் வருகிற ஜூன் மாதம் நடைபெற உள்ள 10-ம் வகுப்பு எனப்படும் எஸ்.எஸ்.எல்.சி. சிறப்பு துணை பொது தேர்விற்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான தனித்தேர்வர்கள் (ஏற்கனவே அறிவியல் பாட செய்முறை பயிற்சி பெற்றவர்கள்) அரசு தேர்வுகள் இயக்ககத்தில் விண்ணப்பிக்கலாம். அதன்படி பெரம்பலூர் கல்வி மாவட்ட தனித்தேர்வர்களில் ஆண்கள் பெரம்பலூர் அரசு மேல் நிலைப்பள்ளியிலும், பெண்கள் பெரம்பலூர் புனித தோமினிக் பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், வேப்பூர் கல்வி மாவட்ட தனித்தேர்வர்களில் ஆண்கள் குன்னம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், பெண்கள் குன்னம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் வருகிற 12-ந் தேதி மாலை 5.45 வரை தங்களின் விண்ணப்பத்தினை பதிவு செய்து கொள்ளலாம். தற்போது நடைமுறையில் உள்ள சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தில் தேர்ச்சி பெறாத பாடங்களில் தேர்வு எழுத ஜூன் 2019 சிறப்பு துணை பொதுத் தேர்வே இறுதி வாய்ப்பாகும். இவ்வகை தேர்வர்கள் வருகிற ஜூன் மாதம் 1-ந் தேதி அன்று 14½ வயது பூர்த்தி செய்திருத்தல் வேண்டும்.
மத்திய- மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளில் 8-ம் வகுப்பு தேர்வில் ஆங்கிலத்துடன் தேர்ச்சி பெற்றுள்ளவர்கள், 9-ம் வகுப்பு வரை பயின்று இடையில் நின்ற மாணவர்கள் மற்றும் தேர்வுத் துறையால் நடத்தப்படும் 8-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதியவர்கள், அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் கல்வி காப்புறுதி திட்டத்தின் கீழ் பயின்று 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், திறந்த வெளிப்பள்ளியில் C Level சான்றிதழ் பெற்றவர்கள், 14½ வயது பூர்த்தி செய்த உழைக்கும் சிறார் கல்வி திட்டத்தின் கீழ் தொழிலாளர் அமைச்சகம் இந்திய அரசின் கீழ் வழங்கப்பட்ட முறைசாரா கல்வி மாற்றுச் சான்றிதழ் பெற்றவர்கள் போன்ற தனித்தேர்வர்கள் அறிவியல் செய்முறை பயிற்சிக்கு ஏற்கனவே பயிற்சி பெற்றிருந்தால் மட்டுமே எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க அனுமதிக்கப்படுவர்.
அறிவியல் பாடத்தைப் பொறுத்தவரை, அறிவியல் பாட செய்முறைப் பயிற்சி பெற்ற தனித்தேர்வர்கள் கருத்தியல் மற்றும் அறிவியல் பாட செய்முறைத் தேர்வு ஆகியவைகளுக்கு விண்ணப்பிக்க வேண்டும். தேர்வுக்கட்டணம் ரூ.125 உடன் கூடுதலாக ஆன்-லைன் பதிவுக் கட்டணம் ரூ.50-ஐ சேர்த்து மொத்தம் ரூ.175-ஐ ரொக்கமாக அரசுத் தேர்வு சேவை மையத்தில் செலுத்துதல் வேண்டும். பார்வையற்றோர் மற்றும் காது கேளாதோருக்கு மேற்குறிப்பிட்ட தேர்வுக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது. தேர்வர்கள், தேர்வெழுதும் போது சொல்வதை எழுதுபவர், கூடுதல் ஒரு மணி நேரம் போன்ற சலுகைகளை பெற விரும்பினால் உரிய மருத்துவச் சான்றிதழ்களை இணைத்து தனியே ஒரு சலுகை கோரும் கடிதத்தை தமது விண்ணப்பத்துடன் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும். மேற்படி மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் சலுகைகள் குறித்த விவரத்தினை www.dge.tn.gov.in இணையதளம் மூலம் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
ஆன்-லைனில் விண்ணப்பத்தினை பதிவு செய்த பிறகு தனித்தேர்வர்களுக்கு ஒப்புகை சீட்டு வழங்கப்படும். அதில் குறிப்பிடப்பட்டுள்ள விண்ணப்ப எண்ணை பயன்படுத்தியே அரசுத் தேர்வுத் துறை பின்னர் அறிவிக்கும் நாளில் தேர்வுக்கூட அனுமதி சீட்டுகளை பதிவிறக்கம் செய்ய வேண்டும். எனவே ஒப்புகை சீட்டினை தனித்தேர்வர்கள் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும். முதன் முறையாக விண்ணப்பிக்கும் நேரடி தனித்தேர்வர்கள் 8, 9-ம் வகுப்பு அல்லது எஸ்.எஸ்.எல்.சி. படித்தமைக்கான அசல் மாற்றுச்சான்றிதழ், 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு அசல் மதிப்பெண் சான்றிதழ், அறிவியல் செய்முறை பயிற்சியில் கலந்து கொண்டமைக்கான பயிற்சி பெற்ற தலைமை ஆசிரியரிடமிருந்து பெறப்பட்ட அத்தாட்சி சான்றிதழ் நகல் இணைக்கப்பட வேண்டும். மேற்குறிப்பிட்ட தேதிகளில் விண்ணப்பிக்க தவறும் தேர்வர்கள் சிறப்பு அனுமதித் திட்டத்தில் வருகிற 23, 24-ந் தேதிகளில் ஆன்-லைனில் விண்ணப்பிக்க வேண்டும். தனித்தேர்வர்களின் விண்ணப்பம் மற்றும் தகுதி குறித்து ஆய்வு செய்யப்பட்ட பின்னரே தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

Related Tags :
Next Story