அடிப்படை பிரச்சினைகளை தீர்க்க பாடுபடுவேன் அ.ம.மு.க. வேட்பாளர் சாருபாலா தொண்டைமான் உறுதி
திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் அடிப்படை பிரச்சினைகளை தீர்க்க பாடுபடுவேன் என்று அ.ம.மு.க. வேட்பாளர் சாருபாலா தொண்டைமான் வாக்காளர்களிடம் உறுதி அளித்தார்.
திருச்சி,
திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் சாருபாலா தொண்டைமான் நேற்று திருச்சி மேற்கு தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டார். திருச்சி ஜங்சன், கண்டோன்மெண்ட், கருமண்டபம், ராம்ஜிநகர், பிராட்டியூர், கொத்தமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் திறந்த ஜீப்பில் சென்றும், வீதிகளில் இறங்கி நடந்து சென்றும் பரிசு பெட்டி சின்னத்திற்கு வாக்களிக்குமாறு பிரசாரம் செய்தார்.
பிரசாரத்தின்போது சாருபாலா தொண்டைமான் பேசியதாவது:-
திருச்சி மாநகராட்சி மேயராக 2 முறை நான் பணியாற்றி இருக்கிறேன். அப்போது மாநகர மக்களின் தேவைகள் அறிந்தும், அவர்களின் கோரிக்கைகள் என்னென்ன? என கேட்டும் தீர்த்து வைத்திருக்கிறேன். குடிநீர் பிரச்சினை, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு ஒரு சிறந்த மேயராக பணியாற்றினேன். அப்படி பணியாற்றும் வாய்ப்பினை வாக்காளர்களாகிய நீங்கள்தான் எனக்கு வழங்கினீர்கள்.
அடிப்படை பிரச்சினைகளை தீர்ப்பேன்
தற்போது திருச்சி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக உங்கள் முன் நிற்கிறேன். என்னை வெற்றிபெற செய்தால், திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, திருவெறும்பூர், ஸ்ரீரங்கம், கந்தர்வகோட்டை, புதுக்கோட்டை ஆகிய பகுதிகளில் நிலவும் அடிப்படை பிரச்சினைகளை உடனுக்குடன் தீர்க்க பாடுபடுவேன்.
எனவே, மண்ணின் மைந்தரான எனக்கு பெருவாரியான வாக்குகளை பரிசு பெட்டி சின்னத்தில் அளித்து வெற்றிபெற செய்ய வேண்டுகிறேன்.
இவ்வாறு அவர் பேசினார். இந்த பிரசாரத்தின்போது திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன், அவைத்தலைவர் ராமலிங்கம், ஜங்சன் பகுதி செயலாளர் தன்சிங் உள்பட நிர்வாகிகள், தொண்டர்கள் உடன் சென்றனர்.
நடிகர் ரஞ்சித் பிரசாரம்
திருச்சி நாடாளுமன்ற தொகுதி அ.ம.மு.க வேட்பாளர் சாருபாலா தொண்டைமானை ஆதரித்து நடிகர் ரஞ்சித் கந்தர்வகோட்டை பஸ் நிலையம் மற்றும் புதுக்கோட்டை அண்ணாசிலை அருகே பிரசாரம் செய்தார்.

Related Tags :
Next Story