உசிலம்பட்டி நகராட்சி அலுவலகத்தில் குடிநீர் கேட்டு கிராம மக்கள் முற்றுகை
உசிலம்பட்டி நகராட்சி அலுவலகத்தில் குடிநீர் கேட்டு கிராமமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உசிலம்பட்டி,
உசிலம்பட்டி நகராட்சிக்கு உட்பட்டது, கருக்கட்டான்பட்டி. இந்த ஊரில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் தொட்டியில் ஒரு தரப்பை சேர்ந்தவர்களை குடிநீர் பிடிக்கவிடாமல் மற்றொரு தரப்பினர் தடுத்துள்ளனர். இதனைத்தொடர்ந்து அந்த தரப்பை சேர்ந்த மக்கள் தங்களுக்கு தனியாக குடிநீர் தொட்டி அமைத்து தண்ணீர் வழங்கக்கோரி கலெக்டரிடம் புகார் தெரிவித்தனர். அப்போது மாவட்ட நிர்வாகம், நகராட்சி அலுவலகத்திற்கு சென்று கோரிக்கையை வலியுறுத்துமாறு கூறியுள்ளனர்.
இதனையடுத்து அந்த மக்கள் உசிலம்பட்டி நகராட்சி அலுவலத்தில் வந்து பார்த்தபோது அதிகாரிகள் இல்லை. இதனால் அவர்கள் குடிநீர் கேட்டு நகராட்சி அலுவலகத்தில் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story