வாக்குப்பதிவு எந்திரங்கள் ஒதுக்கீடு செய்யும் பணி


வாக்குப்பதிவு எந்திரங்கள் ஒதுக்கீடு செய்யும் பணி
x
தினத்தந்தி 8 April 2019 10:45 PM GMT (Updated: 8 April 2019 8:32 PM GMT)

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வரப்பெற்ற மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை சுழற்சி முறை மூலம் ஒதுக்கீடு செய்யும் பணி புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் நடைபெற்றது.

புதுக்கோட்டை,

நாடாளுமன்ற தேர்தலையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வரப்பெற்ற மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை சுழற்சி முறை மூலம் ஒதுக்கீடு செய்யும் பணி புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் நடைபெற்றது. இந்த பணிகளை மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரியும், கலெக்டருமான உமா மகேஸ்வரி பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலை சிறப்பாக நடத்தும் வகையில் மாவட்ட நிர்வாகம், காவல் துறையுடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆயிரத்து 400 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகளில் கூடுதலாக துணை வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளது. முதல் கட்டமாக கடந்த மார்ச் மாதம் 23-ந் தேதி மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை தேர்தல் ஆணையத்தால் வடிவமைக்கப்பட்ட இணைய வழி கணினி மூலம் ஒதுக்கீடு செய்யும் பணிகள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் நடைபெற்றது.

தற்போது ஒவ்வொரு நாடாளுமன்ற தொகுதியிலும் 20-க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். எனவே ஒவ்வொரு வாக்குச்சாவடி மையத்திற்கும் 2-க்கும் மேற்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் தேவைப்படுவதால் சுழற்சி முறை மூலம் இன்று (நேற்று) 2 ஆயிரத்து 124 வாக்குப்பதிவு எந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது என்றார். இதில் தேர்தல் தாசில்தார் திருமலை, அரசு அலுவலர்கள் மற்றும் அங்கீ கரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர். 

Next Story