நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில் பங்குனி தேரோட்டம் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்
நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில் பங்குனி தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
அன்னவாசல்,
புதுக்கோட்டைஅருகே உள்ள நார்த்தாமலையில் மிகவும் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி திருவிழா பூச்சொரிதல், கொடியேற்றம், காப்புக்கட்டுதலுடன் தொடங்கி நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு கடந்த 24-ந் தேதி பூச்சொரிதல் விழா நடைபெற்றது. தொடர்ந்து கடந்த 31-ந் தேதி பங்குனி திருவிழா கொடியேற்றம் மற்றும் காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது.
தொடர்ந்து விழா நாட்களில் தினமும் முத்துமாரியம்மன் அன்னம், ரிஷப, குதிரை, சிம்மம் போன்ற வாகனங்களில் எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தொடர்ந்து நேற்று முன்தினம் பொங்கல் விழாவும், பாரி வேட்டை நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதையொட்டி திரளான பக்தர்கள் பல்வேறு சாமி வேடங்களை அணிந்து கோவிலுக்கு ஊர்வலமாக வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி காலையில் முத்துமாரியம்மனுக்கு மஞ்சள், விபூதி, சந்தனம், பால், தயிர், இளநீர், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் தீபாராதனை காண்பிக்கப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
முன்னதாக அன்னவாசல், கீரனூர், நார்த்தாமலை மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் பால்குடம் எடுத்தும், பறவை காவடி எடுத்தும், அலகு குத்திக்கொண்டு கோவிலுக்கு ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதேபோல கரும்பால் தொட்டில் கட்டி குழந்தைகளை அதில் வைத்து கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்து வந்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
இதைதொடர்ந்து மாலை 3.30 மணியளவில் அலங்கரிக்கப்பட்ட தேரில் முத்து மாரியம்மன் எழுந்தருளினார். பின்னர் திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் பக்தர்களின் பக்தி கோஷம் முழங்க கம்பீரமாக வீதியில் பவனி வந்தது. ஒவ்வொரு வீதியிலும் பக்தர்கள் குவிந்து நின்று முத்துமாரியம்மனுக்கு அர்ச்சனை செய்த னர். பின்னர் 5 மணிக்கு தேர் கோவில் நிலையை வந்தடைந்தது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தேரோட்டத்தை முன்னிட்டு பொதுமக்கள், ஆன்மிக சான்றோர்கள், நீர்மோர் மற்றும் அன்னதானம் வழங்கினர். சுகாதாரத்துறையின் சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு இருந்தது. தேரோட்டத்தை முன்னிட்டு புதுக்கோட்டை, கீரனூர், அன்னவாசல், இலுப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. மேலும் கோவிலை சுற்றியுள்ள பகுதியில் ஏராளமான கடைகள் அமைக்கப்பட்டு இருந்தன.
இன்று (செவ்வாய்க்கிழமை) தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற உள்ளது. முன்னதாக முத்துமாரியம்மன் காலையில் கோவிலில் எழுந்தருளி அங்கிருந்து ஊர்வலமாக ஆகாச ஊரணிக்கு வந்து சேருகிறார். தொடர்ந்து அங்கு அம்மனுக்கு காப்பு கலைத்தல் மற்றும் மஞ்சள் நீராட்டு விழாவுடன் பங்குனி திருவிழா நிறைவுபெற உள்ளது.
விழாவிற்கான ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத்துறை அலுவலர்கள், மண்டகப்படிதாரர்கள், ஊர்பொதுமக்கள் செய்து வருகின்றனர். தேரோட்டத்தை முன்னிட்டு நேற்று ஒரு நாள் மட்டும் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது.
புதுக்கோட்டை அருகே வைத்தூரில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி திருவிழா பூச்சொரிதல் மற்றும் காப்புக்கட்டுதலுடன் தொடங்கி நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 31-ந் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பல்வேறு வாகனங்களில் வீதிஉலா நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் பக்தர்கள் பால்குடம் எடுத்தும், பறவை காவடி எடுத்தும், அலகுகுத்தியும் கோவிலுக்கு ஊர்வலமாக வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி அலங்கரிக்கப்பட்ட தேரில், மாரியம்மன் எழுந்தருளினார். இதையடுத்து திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுக்க தேரோட்டம் நடைபெற்றது. இதில் வைத்தூர் மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை விழாக்கமிட்டியினர் செய்திருந்தனர்.

Related Tags :
Next Story