மாவட்ட செய்திகள்

குடிநீர் வினியோகிக்கப்படாததை கண்டித்து காலிக்குடங்களுடன் பொதுமக்கள் மறியல் + "||" + Public stalking with vaccines to denounce water supplies

குடிநீர் வினியோகிக்கப்படாததை கண்டித்து காலிக்குடங்களுடன் பொதுமக்கள் மறியல்

குடிநீர் வினியோகிக்கப்படாததை கண்டித்து காலிக்குடங்களுடன் பொதுமக்கள் மறியல்
குடிநீர் வினியோகிக்கப்படாததை கண்டித்து பொதுமக்கள் காலிக்குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர்.
துறையூர்,

துறையூர் அருகே உள்ளது சிக்கதம்பூர்பாளையம் கிராமம். இக்கிராம மக்களுக்கு கடந்த ஒரு மாத காலமாக முறையாக குடிநீர் வினியோகிக்கப்படவில்லை. இது தொடர்பாக புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.


இந்த நிலையில் நேற்றும் வழக்கம் போல் குடிநீர் வினியோகிக்கப்படவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் சிக்கதம்பூர்பாளையத்தில் உள்ள துறையூர்-ஆத்தூர் சாலையில் காலிக்குடங்களுடன் கூடினர். பின்னர் அவர்கள் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதன்காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவல் அறிந்த துறையூர் போலீசார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடனடியாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

அதன் பின்னர் போலீசார் போக்குவரத்தை சீர் செய்தனர். இந்த சம்பவத்தால் துறையூர்-ஆத்தூர் சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

தொடர்புடைய செய்திகள்

1. எமரால்டு-ஊட்டி இடையே ரூ.2¼ கோடியில் சாலையை அகலப்படுத்தும் பணி மும்முரம்
எமரால்டு-ஊட்டி இடையே ரூ.2¼ கோடியில் சாலையை அகலப்படுத்தும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
2. துறையூர் பகுதியில் கனமழை: கீரம்பூரில் 20 வீடுகளுக்குள் கழிவுநீர் புகுந்தது பொதுமக்கள் சாலை மறியல்
துறையூர் பகுதியில் பெய்த கனமழை காரணமாக கீரம்பூரில் 20 வீடுகளுக்குள் கழிவுநீர் புகுந்தது. இதை கண்டித்து பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
3. மின்சாரம் தாக்கி மின்ஊழியர் சாவு நிவாரணம் கேட்டு உறவினர்கள் சாலை மறியல்
சுவாமிமலை அருகே மின்சாரம் தாக்கி மின்ஊழியர் இறந்தார். நிவாரணம் கேட்டு உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
4. குடிநீர் கேட்டு பெண்கள் சாலை மறியல்
அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள அய்யனார்குளத்துப்பட்டியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
5. ஓட, ஓட விரட்டி வாலிபர் படுகொலை: கொலையாளிகளை கைது செய்ய கோரி மறியல்; பஸ், கடைகள் தாக்கப்பட்டதால் பரபரப்பு
வாலிபர் ஓட, ஓட விரட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், கொலையாளிகளை கைது செய்ய கோரி மறியல் போராட்டம் நடைபெற்றது. அப்போது கடைகள் மற்றும் பஸ்மீது தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

அதிகம் வாசிக்கப்பட்டவை