புதுப்பாளையம் ஒன்றியத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி வாக்கு சேகரிப்பு

புதுப்பாளையம் ஒன்றியத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
கலசபாக்கம்,
திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூர், செங்கம், கலசபாக்கம், திருப்பத்தூர், ஜோலார்பேட்டை ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளில் வீதி, வீதியாக சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
இந்த நிலையில் நேற்று அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் தலைமையில், வி.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. முன்னிலையில் கலசபாக்கம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கடலாடி, சிங்காரவாடி, கீழ்பாலுர், மேல்பாலூர், மட்டவெட்டு, கீழ்குப்பம் மற்றும் புதுப்பாளையம் ஒன்றியத்திற்கு உட்பட்ட வீரானந்தல், நாகப்பாடி, காரப்பட்டு, கொரட்டாப்பட்டு, அரிதாரிமங்கலம், தாமரைபாக்கம், கல்லரபாடி, வடமாத்தூர், ஒரவந்தவாடி, வாசுதேவன்பட்டு, எரையூர், தொரப்பாடி, பெரியஏரி, புதூர் செங்கம் உள்பட 32 கிராம ஊராட்சிகளில் வேட்பாளர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி வாக்கு சேகரித்தார்.
அப்போது அக்ரி கிருஷ்ணமூர்த்தி பேசுகையில், புதுப்பாளையம் ஒன்றியத்திற்கு உட்பட்ட எரையூர் பகுதியில் செய்யாற்றின் குறுக்கே பெரிய தடுப்பு அணை அமைக்கப்பட்டு இதன் மூலம் எரையூர், மேல்நாச்சிப்பட்டு, சேந்தமங்கலம், வடமாத்தூர், குலால்பாடி, ஆண்டிதாங்கல், கெங்கப்பட்டு வரை உள்ள ஏரிகளுக்கு கால்வாய் அமைத்து அதன் மூலம் ஏரிகளுக்கு தண்ணீர் நிரப்பப்படும்.
அதேபோல் சேந்தமங்கலம், ஆலத்தூர், மஷார், ஏந்தல், கல்லரபாடி, அரிதாரி மங்கலம், தாமரைபாக்கம் வரை உள்ள ஏரிகளுக்கும் கால்வாய் அமைத்து அதன் மூலம் தண்ணீர் நிரப்பப்பட்டு விவசாயிகளுக்கு பாசன வசதிகளையும், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தி அப்பகுதி மக்களின் குடிநீர் பிரச்சினைகளையும் போக்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.
வாக்கு சேகரிப்பின் போது முன்னாள் அமைச்சர் ராமச்சந்திரன், வனரோஜா எம்.பி., பா.ம.க. மாநில தேர்தல் பிரசார பிரிவு துணை செயலாளர் எதிரொலிமணியன், மாநில துணை பொது செயலாளர் காளிதாஸ், அ.தி.மு.க. மாவட்ட துணை செயலாளர்கள் என்.துரை, அமுதா அருணாச்சலம், பா.ம.க. மாவட்ட செயலாளர் பிரசாந், தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் வி.எம்.நேரு, பா.ஜ.க. மாவட்ட தலைவர் எஸ்.நேரு உள்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story






