பழங்குடியின மக்களுக்கு அடிப்படை வசதி செய்து தரப்படும் - இ.பெ.செந்தில்குமார் எம்.எல்.ஏ. பேச்சு

கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியில் வாழும் பழங்குடியின மக்களுக்கு அடிப்படை வசதி செய்து தரப்படும் என்று இ.பெ.செந்தில்குமார் எம்.எல்.ஏ. பேசினார்.
பெரும்பாறை,
திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் வேலுச்சாமியை ஆதரித்து திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் இ.பெ.செந்தில்குமார் எம்.எல்.ஏ. கீழ்மலைப்பகுதியில் பிரசாரம் செய்தார். அதில் பூலத்தூர், கும்பரையூர், ஊத்து, பண்ணைக்காடு, தாண்டிக்குடி, மங்களம்கொம்பு, பெரும்பாறை, கொங்கப்பட்டி உள்ளிட்ட இடங்களில் அவர் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது-
இந்த 5 ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் அனைத்தும் பறிபோய்விட்டது. இளைஞர்கள் வேலையில்லாமல் வீட்டில் இருக்கிறார்கள். மோடி இந்தோனேசியா, வியட்னாமில் இருந்து காபி, மிளகு இறக்குமதி செய்கிறார். அதனால் மலைப்பகுதியில் விளையும் காபி, மிளகு விலை இல்லாமல் போய்விட்டது.
இதனால் விவசாயிகள் கடனாளியாகி விட்டனர். மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படும். அப்போது படித்த இளைஞர்கள் ஒரு கோடி பேருக்கு நெடுஞ்சாலைத்துறையில் வேலை வழங்கப்படும். கொடைக்கானல் கீழ்மலைப்பகுதியில் பழங்குடியின மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரப்படும். பெரும்பாறை குத்துகாடு கிராமத்தில் மின்சார வாரியம் மூலம் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. தேர்தலில் வெற்றி பெற்றவுடன், அந்த கிராமத்திற்கு மின்சாரம் வினியோகிக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
பிரசாரத்தின்போது, தி.மு.க. கீழ்மலை ஒன்றிய செயலாளர் கருமலைப்பாண்டியன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் கணேசன், கீழ்மலை ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் அய்யப்பன், ஆத்தூர் ஒன்றிய செயலாளர் ராமன், ஆத்தூர் ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் மணிகண்டன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Related Tags :
Next Story