வாக்காளர்களுக்கு வினியோகம் செய்ய சட்டமன்ற தொகுதி வாரியாக ‘பூத் சிலிப்’ அனுப்பும் பணி மும்முரம்
வாக்காளர்களுக்கு வினியோகம் செய்ய சட்டமன்ற தொகுதி வாரியாக ‘பூத் சிலிப்’ அனுப்பும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
விழுப்புரம்,
தமிழகத்தில் வருகிற 18-ந்தேதி நாடாளுமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறுகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம் (தனி), கள்ளக்குறிச்சி ஆகிய 2 தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 9 நாட்களே உள்ள நிலையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதி வாரியாக பிரித்து அனுப்பப்பட்டு அந்தந்த தாலுகா அலுவலகங்களில் வைக்கப்பட்டுள்ளது.
மேலும் மாவட்டத்தில் உள்ள 13 லட்சத்து 36 ஆயிரத்து 175 ஆண் வாக்காளர்கள், 13 லட்சத்து 29 ஆயிரத்து 373 பெண் வாக்காளர்கள், 380 திருநங்கைகள் என மொத்தம் உள்ள 26 லட்சத்து 65 ஆயிரத்து 928 வாக்காளர்களுக்கு வீடு, வீடாக சென்று ‘பூத் சிலிப்’ வழங்கப்பட உள்ளது.
இந்த பணியை நேற்று முன்தினம் மாவட்ட தேர்தல் அதிகாரியும் கலெக்டருமான சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். இதனை வருகிற 12-ந் தேதிக்குள் வாக்காளர்களுக்கு வினியோகம் செய்து முடிக்க வேண்டும் என்று கலெக்டர் கூறியுள்ளார்.
இதன் அடிப்படையில் வாக்காளர்களுக்கு வினியோகம் செய்வதற்காக நேற்று கலெக்டர் அலுவலகத்தில் இருந்து 11 சட்டமன்ற தொகுதிகள் வாரியாக ‘பூத் சிலிப்’களை லாரி மூலம் அனுப்பி வைக்கும் பணி மும்முரமாக நடைபெற்றது. இவை அனைத்தும் அந்தந்த தாலுகா அலுவலகங்களுக்கு கொண்டு செல்லப்பட்டது. இவற்றை உதவி தேர்தல் அலுவலர்கள் மூலமாக வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் பெற்றுக்கொண்டு அதனை வீடு, வீடாக சென்று வாக்காளர்களுக்கு வினியோகம் செய்ய உள்ளனர்.
Related Tags :
Next Story