திருத்துறைப்பூண்டியில் வாக்குப்பதிவு எந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி கலெக்டர் ஆய்வு


திருத்துறைப்பூண்டியில் வாக்குப்பதிவு எந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 10 April 2019 4:15 AM IST (Updated: 10 April 2019 12:51 AM IST)
t-max-icont-min-icon

திருத்துறைப்பூண்டியில் வாக்குப்பதிவு எந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணியினை மாவட்ட கலெக்டர் ஆனந்த் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

திருத்துறைப்பூண்டி,

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 274 வாக்குச்சாவடிகளுக்கான 316 வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர்களின் சின்னம் பொருத்தும் பணிகள் திருத்துறைப்பூண்டி தாசில்தார் அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. இதனை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான ஆனந்த் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் திருத் துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மொத்த வாக்குச்சாவடிகள் குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்து, வாக்குப்பதிவு எந்திரங் களில் சின்னம் பொருத்தும் பணியினை விரைவாக மேற்கொள்ளுமாறு அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தர விட்டார்.

ஆய்வின்போது திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் தெய்வநாயகி, தாசில்தார் ராஜன்பாபு மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Next Story