மாவட்ட செய்திகள்

தேர்தல் துணை கலெக்டர் பணியிடத்தை நிரப்பக்கோரி வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் + "||" + Revenue Officers Demonstration to fill the Election Assistant Collector's office

தேர்தல் துணை கலெக்டர் பணியிடத்தை நிரப்பக்கோரி வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

தேர்தல் துணை கலெக்டர் பணியிடத்தை நிரப்பக்கோரி வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
தேர்தல் துணை கலெக்டர் பணியிடத்தை நிரப்பக்கோரி நாகையில் வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகப்பட்டினம்,

நாகை தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் தேர்தல் துணை கலெக்டர் பணியிடங்களை நிரப்பக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட துணை தலைவர் முருகானந்தம் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் பிச்சைபிள்ளை முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் இளவரசன் கலந்துகொண்டு பேசினார். தேர்தல் துணை கலெக்டர் பணியிடத்தை உடனே நிரப்ப வேண்டும். தேர்தலின் போது பணிபுரியும் அலுவலர்களுக்கு செலவுக்கு தேவையான தொகையை உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் மாவட்ட துணைத்தலைவர் ராஜன், அரசு ஊழியர் சங்க மாவட்ட பொருளாளர் ராணி, வட்ட தலைவர் பாலசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வயலில் இறங்கி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திருத்துறைப்பூண்டி அருகே விவசாயிகள் வயலில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
2. அருள் மீது போடப்பட்டுள்ள குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி வக்கீல்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
வக்கீல் அருள் மீது போடப்பட்டுள்ள குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி பெரம்பலூரில் வக்கீல்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
3. விளை நிலங்களில் எண்ணெய் குழாய்கள் பதிக்க எதிர்ப்பு: துவாக்குடியில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
விளை நிலங்களில் எண்ணெய் குழாய்கள் பதிக்க எதிர்ப்பு தெரிவித்து துவாக்குடியில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
4. வாக்கு எண்ணும் மையத்துக்கு அலுவலர்கள்-முகவர்கள் செல்போன் கொண்டு செல்ல தடை - கலெக்டர் தகவல்
வாக்கு எண்ணும் அலுவலர்கள், முகவர்கள் வாக்கு எண்ணும் மையத்துக்கு செல்போன் எடுத்து வருவது தடை செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.
5. அகவிலைப்படியை உடனே வழங்கக்கோரி, அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் - 22 இடங்களில் நடந்தது
அகவிலைப்படியை உடனே வழங்கக்கோரி விழுப்புரம் மாவட்டத்தில் அரசு ஊழியர் சங்கத்தினர் 22 இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.