தஞ்சையில் இருந்து நாகர்கோவிலுக்கு 2,200 டன் புழுங்கல் அரிசி சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது


தஞ்சையில் இருந்து நாகர்கோவிலுக்கு 2,200 டன் புழுங்கல் அரிசி சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது
x
தினத்தந்தி 10 April 2019 4:15 AM IST (Updated: 10 April 2019 1:13 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சையில் இருந்து நாகர்கோவிலுக்கு 2,200 டன் புழுங்கல் அரிசி சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டத்தில் தற்போது சம்பா நெல் அறுவடை செய்யப்பட்டு, நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் அந்த நெல் கொள்முதல் செய்யப்பட்டு தஞ்சை பிள்ளையார்பட்டி, இரும்புதலை, அம்மன்பேட்டை, புனல்குளத்தில் உள்ள சேமிப்பு கிடங்குகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

இது தவிர நெல் மூட்டைகள் அரவைக்கு அனுப்பப்பட்டு அரிசிமூட்டைகளும் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு இருப்பு வைக்கப்பட்டுள்ள அரிசி மூட்டைகள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு சரக்கு ரெயில் மற்றும் லாரிகள் மூலம் பொதுவினியோகத்திட்டத்தின் கீழ் வினியோகம் செய்வதற்காக அனுப்பி வைக்கப்படும்.

நாகர்கோவில்

அதன்படி நேற்று பிள்ளையார்பட்டி, புனல்குளம் ஆகிய பகுதியில் உள்ள சேமிப்புக்கிடங்குகளில் இருந்து அரிசி மூட்டைகள் லாரிகளில் ஏற்றப்பட்டு தஞ்சை ரெயில் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டன. அந்த அரிசி மூட்டைகள், சரக்கு ரெயிலில் ஏற்றப்பட்டன. மொத்தம் 42 வேகன்களில் 2,200 டன் புழுங்கல் அரிசி ஏற்றப்பட்டன. பின்னர் இந்த அரிசி மூட்டைகள் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

Next Story