காசோலை மோசடி வழக்கில் வெளிநாட்டு வேலைக்கு ஆள் அனுப்பும் ஏஜெண்டுக்கு 1 ஆண்டு சிறை கோர்ட்டு தீர்ப்பு


காசோலை மோசடி வழக்கில் வெளிநாட்டு வேலைக்கு ஆள் அனுப்பும் ஏஜெண்டுக்கு 1 ஆண்டு சிறை கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 9 April 2019 10:15 PM GMT (Updated: 9 April 2019 7:46 PM GMT)

காசோலை மோசடி வழக்கில் வெளிநாட்டு வேலைக்கு ஆள் அனுப்பும் ஏஜெண்டுக்கு 1 ஆண்டு சிறை தண்டனை விதித்து பட்டுக்கோட்டை கோர்ட்டு தீர்ப்பளித்தது.

பட்டுக்கோட்டை,

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை ஆஸ்பத்திரி ரோடு தெருவை சேர்ந்தவர் தம்பு மனோகரன் (வயது49). வெளிநாட்டு வேலைக்கு ஆள் அனுப்பும் ஏஜெண்டாக உள்ளார்.

இவர் பட்டுக்கோட்டை கரிக்காடு தெருவை சேர்ந்த ஓட்டல் மேலாளர் தேவநாதன் (58) என்பவரிடம் கடந்த 2014-ம் ஆண்டு ரூ.15 லட்சம் கடன் வாங்கினார்.

ஒரு ஆண்டு சிறை

இந்த கடனை திருப்பி அளிப்பதற்காக ஒரு காசோலையை தம்பு மனோகரன், தேவநாதனிடம் கொடுத்தார். அந்த காசோலையை வங்கியில் செலுத்தியபோது வங்கி கணக்கில் போதிய பணம் இல்லாமல், காசோலை திரும்பி வந்துவிட்டது.

இதையடுத்து தேவநாதன் பட்டுக்கோட்டை குற்றவியல் விரைவு கோர்ட்டில் தம்பு மனோகரன் மீது காசோலை மோசடி வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த கோர்ட்டு தம்பு மனோகரனுக்கு 1 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

Next Story