பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் ஒதுக்கீடு
பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் ஒதுக்கீடு செய்யும் பணி நடைபெற்றது.
பெரம்பலூர்,
பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெரம்பலூர் (தனி), துறையூர், முசிறி, மண்ணச்சநல்லூர், லால்குடி மற்றும் குளித்தலை உள்ளிட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவி, இந்த தேர்தலில் முதல் முறையாக பயன்படுத்தப்படவுள்ள வாக்குப்பதிவினை உறுதி செய்யும் எந்திரம் (வி.வி.பேட்) ஆகியவை கணினி மூலம் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு ஏற்கனவே தொடர்புடைய தாலுகா அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதேபோல தற்போதும் வாக்குச்சாவடி மையங்களுக்கு தேவையான வாக்குப்பதிவு எந்திரங்கள் கணினி குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யும் பணி பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் முகவர்களின் முன்னிலையில் நடந்தது.
இதற்கு பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதிக்கான பொது பார்வையாளர் மஞ்சுநாத் பஜன்ட்ரி, மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான சாந்தா ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் போலீஸ் பார்வையாளர் தேவராஜ், தேர்தல் செலவின பார்வையாளர்களான துக்ரியா, ஹர்ஸ்வர்தன் உம்ரே ஆகியோர் கலந்துகொண்ட னர். மொத்தமாக 6 சட்டமன்ற தொகுதிகளுக்கும் 1,644 வாக்குச்சாவடி மையங்களுக்கு தேவையான 3,288 வாக்குப்பதிவு எந்திரங்களுடன், கூடுதலாக 658 வாக்குப்பதிவு எந்திரங்கள் என மொத்தம் 3,946 வாக்குப்பதிவு எந்திரங்களும், 1,644 கட்டுப்பாட்டு கருவிகளுடன், கூடுதலான 329 கட்டுப்பாட்டு கருவிகளுடன் என மொத்தம் 1,973 கட்டுப்பாட்டு கருவிகளும், 1,644 வி.வி.பேட் கருவிகளுடன், கூடுதலாக 493 வி.வி.பேடுகளுடன் என மொத்தம் 2,137 வி.வி.பேட் கருவிகளையும் சுழற்சி முறையில் ஒவ்வொரு வாக்குச்சாவடி மையங்களுக்கும் அனுப்புவதற்கான பணி நடைபெற்றது.
அப்போது மாவட்ட வருவாய் அதிகாரி அழகிரிசாமி, எறையூர் சர்க்கரை ஆலையின் தலைமை நிர்வாகி ஜெய்னுலாபுதீன் உள்பட பலர் உடனிருந்தனர்.

Related Tags :
Next Story