வாக்குச்சாவடி மையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் வகையில் பணியாளர்கள் நியமனம் கலெக்டர் தகவல்
வாக்குச்சாவடி மையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி செய்யும் வகையில் பணியாளர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர் என கலெக்டர் உமா மகேஸ்வரி தெரிவித்து உள்ளார்.
புதுக்கோட்டை,
நாடாளுமன்ற தேர்தலையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் அனைவரும் தவறாமல் வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி புதுக்கோட்டை டவுன்ஹாலில் நேற்று நடைபெற்றது. இதற்கு மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான உமா மகேஸ்வரி தலைமை தாங்கினார். விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகள் மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்களில் தாங்கள் வாக்களிக்கும் வேட்பாளர்களின் சின்னங்களை அறிந்து கொள்ளுதல், வாக்களிக்கும் முறை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்காக ஏற்படுத்தப்பட்டு உள்ள சிறப்பு சாய்தள நடை மேடை வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் குறித்து விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டதுடன் வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழியும் எடுக்கப்பட்டது.
இதில் புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் தண்டாயுதபாணி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ரவிச்சந்திரன், நகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன், தாசில்தார் பரணி, அரசு அலுவலர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து கலெக்டர் உமா மகேஸ்வரி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் தேர்தலை சிறப்பாக நடத்தும் வகையில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வாக்காளர்கள் அனைவரையும் தவறாமல் வாக்களிக்க செய்து 100 சதவீதம் வாக்குப்பதிவை ஏற்படுத்தும் வகையில் வாக்காளர் விழிப் புணர்வு ஊர்வலம், மாரத்தான், மனித சங்கிலி, வாக்காளர் விழிப்புணர்வு அஞ்சல் அட்டை, கேபிள் டி.வி. ஒளி பரப்பு, செய்தி மக்கள் தொடர்பு துறையின் அதிநவீன மின்னணு வீடியோ வாகனம் மூலம் வாக்காளர் விழிப்புணர்வு குறும்படங்கள் ஒளிபரப்புதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் அனைவரும் சிரமமின்றி வாக்களிக்கும் வகையில் வாக்குப்பதிவு மையங்களில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
மேலும் வாக்குச்சாவடி மையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு 2 சக்கர வண்டிகளும், இவர்களுக்கு உதவி செய்யும் வகையில் பணியாளர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர். மேலும் வாக்குச்சாவடி மையங்களில் குடிநீர் வசதி, கழிவறை வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இதன்மூலம் புதுக்கோட்டை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் எவ்வித சிரமமின்றி எளிதாக வாக்களிக்கும் வகையில் தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story