ஓசூர் பகுதிகளில், பொதுமக்களின் குறைகளை தீர்க்க நடவடிக்கை எடுப்பேன் - அ.தி.மு.க. வேட்பாளர் ஜோதி பாலகிருஷ்ணரெட்டி உறுதி
ஓசூர் பகுதிகளில் பொதுமக்களின் குறைகளை உடனடியாக தீர்த்து வைக்க உரிய நடவடிக்கை எடுப்பேன் என்று அ.தி.மு.க. வேட்பாளர் ஜோதி பாலகிருஷ்ணரெட்டி வாக்கு சேகரிப்பின் போது உறுதியளித்தார்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில், அ.தி.மு.க. வேட்பாளராக ஜோதி பால கிருஷ்ணரெட்டி போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி மற்றும் கட்சி நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஆதரவு திரட்டி வாக்கு சேகரித்து வருகின்றனர். இதேபோல் வேட்பாளர் ஜோதி பாலகிருஷ்ணரெட்டி கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் வீதி, வீதியாக சென்று பொதுமக்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
இந்தநிலையில் நேற்று வேட்பாளர் ஜோதி பாலகிருஷ்ணரெட்டி ஓசூர் வெங்கடேஷ் நகர், தேர்பேட்டை, பார்வதி நகர் ஆகிய பகுதிகளில் கட்சியினர் மற்றும் கூட்டணி கட்சியினருடன் வீதி, வீதியாக சென்று பிரசாரம் செய்தார். அப்போது அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
இந்த வாக்கு சேகரிப்பின் போது, முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டியை பின்பற்றி, ஓசூர் சட்டமன்ற தொகுதிக்கு பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வருவேன். மேலும் பொதுமக்களின் குறைகளை உடனடியாக தீர்த்து வைக்க உரிய நடவடிக்கை எடுப்பேன் என்று வேட்பாளர் ஜோதி பாலகிருஷ்ணரெட்டி உறுதியளித்தார். இந்த வாக்கு சேகரிப்பின் போது வேட்பாளருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.
வாக்கு சேகரிப்பின் போது, மாவட்ட அ.தி.மு.க. பிரதிநிதி சிட்டிஜெகதீசன், பிரபாகர் ரெட்டி, வெங்கடேசன், எஸ்.வி.எஸ்.மாதேஷ், பாலு, அஸ்வத், நாகராஜ் மற்றும் கட்சியினரும், கூட்டணி கட்சியினரும் உடன் சென்றனர்.
Related Tags :
Next Story