கொடைரோடு அருகே, பாலத்தின் தடுப்பு சுவரில் கார் மோதி பெண் பலி - கணவர், டிரைவர் படுகாயம்


கொடைரோடு அருகே, பாலத்தின் தடுப்பு சுவரில் கார் மோதி பெண் பலி - கணவர், டிரைவர் படுகாயம்
x
தினத்தந்தி 10 April 2019 4:30 AM IST (Updated: 10 April 2019 2:00 AM IST)
t-max-icont-min-icon

கொடைரோடு அருகே பாலத்தின் தடுப்பு சுவரில் கார் மோதி பெண் பலியானார். அவரது கணவர், டிரைவர் படுகாயம் அடைந்தனர்.

கொடைரோடு,

திருப்பூர் மாவட்டம் ஆண்டிபாளையத்தை சேர்ந்தவர் ஸ்ரீதர் (வயது 62). இவர் தனது மனைவி சித்ராவுடன்(56) மதுரையில் உள்ள நண்பர் வீட்டிற்கு செல்வதற்காக காரில் புறப்பட்டு சென்றார். காரை திருப்பூரை சேர்ந்த முத்தையா(32) ஓட்டினார். இந்த கார் கொடைரோடு அருகேயுள்ள காமலாபுரம் பிரிவு 4 வழிச்சாலையில் வந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக சாலையில் உள்ள பாலத்தின் தடுப்பு சுவர் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் ஸ்ரீதர், அவரது மனைவி சித்ரா மற்றும் டிரைவர் முத்தையா ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து அவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திண்டுக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சித்ரா பரிதாபமாக இறந்தார். மற்ற 2 பேருக்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. சித்ராவின் உடல் பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

விபத்து குறித்து அம்மையநாயக்கனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் லாவண்யா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

Next Story