ராசிபுரம் பகுதியில் தி.மு.க. கூட்டணி வேட்பாளர் சின்ராஜ் வாக்கு சேகரிப்பு


ராசிபுரம் பகுதியில் தி.மு.க. கூட்டணி வேட்பாளர் சின்ராஜ் வாக்கு சேகரிப்பு
x
தினத்தந்தி 10 April 2019 4:00 AM IST (Updated: 10 April 2019 4:36 AM IST)
t-max-icont-min-icon

ராசிபுரம் பகுதியில் நேற்று தி.மு.க. கூட்டணி வேட்பாளர் சின்ராஜ் வாக்கு சேகரித்தார்.

ராசிபுரம்,

நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. கூட்டணி சார்பில் கொ.ம.தே.க. வேட்பாளர் ஏ.கே.பி.சின்ராஜ் போட்டியிடுகிறார். இவர் நேற்று காலையில் ராசிபுரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமங்களில் வாக்கு சேகரித்தார். அணைப்பாளையம் கிராமத்தில் தேர்தல் பிரசாரத்தை முன்னாள் மத்திய மந்திரியும், கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளருமான காந்திசெல்வன் தொடங்கி வைத்தார்.

பின்னர் வேட்பாளர் சின்ராஜ் அணைப்பாளையம், முருங்கப்பட்டி, சந்திரசேகரபுரம், போடிநாயக்கன்பட்டி, சிங்களாந்தபுரம், மோளப்பாளையம், கனகபொம்மன்பட்டி, அரசபாளையம், காக்காவேரி, மலையாம்பட்டி, வடுகம், பட்டணம் பேரூராட்சி, கோனேரிப்பட்டி, கவுண்டம்பாளையம், முத்துக்காளிப்பட்டி, குருக்கபுரம், கூனவேலம்பட்டிபுதூர், பொன்குறிச்சி, 85 ஆர்.குமாரபாளையம், பிள்ளாநல்லூர் பேரூராட்சி உள்ளிட்ட பகுதிகளில் கிராமம், கிராமமாக சென்று திறந்த ஜீப்பில் நின்று உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். சென்ற இடங்களில் எல்லாம் கட்சியினர் பட்டாசு வெடித்தும், பெண்கள் ஆரத்தி எடுத்தும் வரவேற்பு கொடுத்தனர்.

மாலையில் ராசிபுரம் நகரத்தில் எல்.ஐ.சி. அலுவலகம் அருகில் வேட்பாளர் ஏ.கே.பி.சின்ராஜ் பிரசாரத்தை தொடங்கினார். திறந்த ஜீப்பில் நின்றவாறு நகரின் பழைய பஸ் நிலையம் உள்ளிட்ட முக்கிய வீதிகளில் சென்று வாக்கு சேகரித்தார். இந்த பிரசாரத்தின்போது வேட்பாளர் ஏ.கே.பி.சின்ராஜ் பேசியதாவது:-

நான் வெற்றி பெற்றால் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தருவேன். பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும். திருமணிமுத்தாறு திட்டம் நிறைவேற்ற பாடுபடுவேன். ஊழலற்ற முறையில் மக்களுக்கு சேவை செய்வேன். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த பிரசாரத்தின் போது மாவட்ட தி.மு.க.இளைஞர் அணி அமைப்பாளர் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார், ராசிபுரம் ஒன்றிய செயலாளர் ஜெகநாதன், ராசிபுரம் நகர செயலாளர் என்.ஆர். சங்கர், மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் பிரபாகரன், கொ.ம.தே.க. விவசாய அணி செயலாளர் சந்திரசேகர், ஜெ.கே.நடராஜ் மற்றும் காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டு உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர். 

Next Story