வானவில் : சூப்பர் பேட்டரி பைக்


வானவில் : சூப்பர் பேட்டரி பைக்
x
தினத்தந்தி 10 April 2019 12:02 PM IST (Updated: 10 April 2019 12:02 PM IST)
t-max-icont-min-icon

மெதுவாகச் செல்லும் என்ற தத்துவத்தை உடைத்து சூப்பர் மோட்டார் சைக்கிளை உருவாக்கியுள்ளது.

பேட்டரி வாகனங்கள் என்றாலே மெதுவாகச் செல்லும் என்ற தத்துவத்தை உடைத்து சூப்பர் மோட்டார் சைக்கிளை உருவாக்கியுள்ளது. லைட்னிங் என்ற பெயரில் வந்துள்ள இந்த பேட்டரி மோட்டார் சைக்கிள் வழக்கமான பெட்ரோலில் இயங்கும் சூப்பர் பைக்குகளைப் போன்ற தோற்றத்தை கொண்டு உள்ளது.

அதேபோல செயல்பாட்டிலும் பெட்ரோல் வாகனங்களுக்கு இணையாக இருக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.9 லட்சமாகும். இதில் கார்பன் எடிஷன் மாடல் விலை ரூ.13.8 லட்சமாகும். இதில் ஆரம்ப நிலை மாடலுக்கு ரூ. 34,617 செலுத்தி முன்பதிவு செய்யலாம். கார்பன் எடிஷனுக்கு ரூ.6.92 லட்சம் செலுத்தி பதிவு செய்யலாம் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

பிரீமியம் ஸ்போர்ட்ஸ் பைக்குகளுக்கு உரித்தான அனைத்து சிறப்பு அம்சங்களும் இதில் உள்ளன. ஏரோ டைனமிக் வடிவமே சீறிப் பாய்வதை உறுதி செய்வதாக உள்ளது. இதில் லிக்விட் கூல்டு ஏ.சி. இன்டக்‌ஷன் மோட்டார் உள்ளது. இது 90 ஹெச்.பி. திறனும் 244 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையும் கொண்டது.

இதில் கார்பன் எடிஷன் மாடல் 120 ஹெச்.பி. திறனும் 244 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையும் கொண்டது. ஸ்டாண்டர்டு மாடல் மணிக்கு 217 கி.மீ. வேகத்திலும், கார்பன் எடிஷன் மாடல் மணிக்கு 241 கி.மீ வேகத்திலும் சீறிப் பாய்கிறது. இந்த மோட்டார் சைக்கிளில் 3 வெவ்வேறு அளவுகளிலான பேட்டரிகள் பயன்படுத்தப்படுகின்றன. 10 கிலோவாட், 15 கிலோவாட், 20 கிலோவாட் பேட்டரிகள் இதில் உள்ளன.

இதில் 10 கிலோவாட் பேட்டரி வாகனத்தை ஒரு முறை சார்ஜ் செய்தால் அது 113 கி.மீ. தூரம் வரை செல்லும். 15 கிலோவாட் பேட்டரியை பயன்படுத்தினால் அது 169 கி.மீ. முதல் 241 கி.மீ. தூரம் வரை சென்றுள்ளது. 20 கிலோவாட் பேட்டரி 241 கி.மீ முதல் 322 கி.மீ. தூரம் வரை பயணித்துள்ளது. இதில் 160 கி.மீ. வேகத்தை 20 வினாடிகளில் எட்ட முடிவது சிறப்பாகும். கார்பன் எடிஷனில் ஓஹ்லின்ஸ் சஸ்பென்ஷன் உள்ளது. அதேபோல பிரெம்போ பிரேக்குகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதில் ஜி.பி.எஸ். அடிப்படையிலான லாகிங் வசதி உள்ளது.

தற்போது அமெரிக்காவில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த ஸ்போர்ட்ஸ் பேட்டரி பைக் விரைவிலேயே இந்தியாவிலும் அறிமுகமாக உள்ளது.


Next Story