வானவில் : ‘ரெனால்ட் கேப்ச்சர்’
மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் ‘ரெனால்ட் கேப்ச்சர்’
பிரான்சை சேர்ந்த கார் தயாரிப்பு நிறுவனமான ரெனால்ட் நிறுவனத்தின் ‘கேப்ச்சர் மாடல்’ பல புதிய மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.9.50 லட்சம். இந்த மாடல் கேப்ச்சர் ஆர்.எக்ஸ்.இ மற்றும் கேப்ச்சர் பிளாடைன் என்ற பெயரில் வெளியாகிஉள்ளது.
பிளாடைன் டீசல் மாடல் விலை ரூ.12 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேம்படுத்தப்பட்ட மாடலில் 7 அங்குல தொடுதிரை மீடியா எவல்யூஷன் இன்போடைன்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் பிளே, ஆண்ட்ராய்டு இயங்குதளம் உள்ளது. இதில் கூடுதல் பாதுகாப்பு அம்சமாக இரட்டை ஏர் பேக் சேர்க்கப்பட்டுள்ளது. இதில் ஏ.பி.எஸ். வசதியானது இது அறிமுகம் ஆனதிலிருந்தே இடம்பெற்றிருந்தது. இப்போது ரியர் பார்க்கிங் சென்சாரும் சேர்க்கப்பட்டுள்ளது.
அதேபோல முன் சீட்டில் அமரும் பயணி மற்றும் டிரைவர் சீட் பெல்ட் அணிந்திருப்பதை உணர்த்தும் கருவி மற்றும் அதிக வேகத்தில் சென்றால் எச்சரிக்கும் சிஸ்டம் ஆகியன கூடுதல் பாதுகாப்பு அம்சங்களாக இதில் சேர்க்கப்பட்டுள்ளன. முன்பக்கம் மற்றும் பின்பக்க விபத்து சோதனையில் இந்த கார் சான்று பெற்றது. அத்துடன் பாதசாரிகளின் பாதுகாப்பு அம்சங்களையும் கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டது.
வழக்கம்போல 106 ஹெச்.பி. திறன், 1.5 லிட்டர் பெட்ரோல் மாடலும், 110 ஹெச்.பி. திறன் 1.5 லிட்டர் டீசல் என்ஜினையும் கொண்டதாகவும் 5 மற்றும் 6 கியர்களுடன் இது வெளிவந்துள்ளது. முந்தைய பெட்ரோல் மாடலைக் காட்டிலும் இந்த மேம்படுத்தப்பட்ட மாடல் விலை ரூ.50 ஆயிரம் குறைவாகும். இந்த கார் நிசான் கிக்ஸ், டாடா ஹாரியர், ஹுண்டாய் கிரெட்டா ஆகிய மாடல் கார்களுக்கு போட்டியாக இருக்கும் என்று தெரிகிறது.
Related Tags :
Next Story