வானவில் : சாட்டிங் செய்து கயவர்களை விரட்டும் ரோபோ


வானவில் :  சாட்டிங் செய்து கயவர்களை விரட்டும் ரோபோ
x
தினத்தந்தி 10 April 2019 3:56 PM IST (Updated: 10 April 2019 3:56 PM IST)
t-max-icont-min-icon

சாட்டிங் செய்து தொல்லை கொடுக்கும் நபர்கள் அதிகரித்து விட்டனர்.

தொழில்நுட்ப வளர்ச்சியால் நன்மைகள் அதிகரித்துள்ளது போலவே ஆபத்துகளும் பெருகி உள்ளன. ஏதோ ஒரு காரணத்தை சொல்லி நமது வங்கி தகவல்களை பெறுவதற்காக அடிக்கடி கால் மற்றும் சாட்டிங் செய்து தொல்லை கொடுக்கும் நபர்கள் அதிகரித்து விட்டனர்.

நியூசிலாந்து நாட்டை சேர்ந்த விஞ்ஞானிகள் ரி ஸ்கேம் ( RE:SCAM ) என்னும் சாட் செய்யக் கூடிய ஒரு ரோபோவை உருவாக்கியுள்ளனர். நம்மை தொந்தரவு செய்யும் நபர்களின் ஈ-மெயில் முகவரிகளை இந்த ரோபோவிற்கு அனுப்பிவிட்டால் போதும். அந்த ஆசாமிகளுடன் தொடர்ந்து சாட்டிங்கில் பேசிக்கொண்டே இருக்கும்.

எதிர்முனையில் இருப்பவரே நாம் தான் உரையாடிக் கொண்டிருக்கிறோம் என்று நம்பி பேசிக் கொண்டிருப்பார். சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக இந்த ரோபோ வேண்டுமென்றே இலக்கணப் பிழையுடன் சாட் செய்யும். சில சமயம் நகைச்சுவையாகவும் பேசும். இதனால் அந்த நபரின் நேரம் விரயமாகும்.

மணிக்கணக்காக பிடிகொடுக்காமல் பேசுவதால் பணத்தை சுருட்ட நினைக்கும் நபர், நொந்து போய் தானே சாட்டிங் செய்வதிலிருந்து விலகிவிடுவார். மீண்டும் நம் பக்கம் திரும்பவும் யோசிப்பார். நெட்சேப் என்ற நிறுவனத்தின் இந்த கண்டுபிடிப்பு பலரின் பாராட்டுகளை பெற்று வருகிறது.


Next Story