உணவே மருந்து என்னும் நெறியில் தமிழர்கள் வாழ்ந்தனர் தமிழ்ப்பல்கலைக்கழக துணைவேந்தர் பேச்சு
உணவே மருந்து என்னும் நெறியில் தமிழர்கள் வாழ்ந்தனர் என தமிழ்ப்பல்கலைக்கழக துணைவேந்தர் பாலசுப்பிரமணியன் பேசினார்.
தஞ்சாவூர்,
தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் அறிவியல் தமிழ் மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் ஐவகை நிலங்களில் உணவு என்னும் தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. இதில் டாக்டர் நரேந்திரன் கலந்து கொண்டு நலவாழ்விற்கான உணவு குறித்து பேசினார்.
அவர் பேசும்போது, புளித்த மாவினால் செய்யப்படும் இட்லியே கல்லீரலுக்கு நன்மை செய்கிறது. முளைகட்டிய சிறுதானியங்களை சாப்பிட வேண்டும். காலை உணவை தவிர்க்கக்கூடாது. ஒரே நேரத்தில் அதிக அளவு தண்ணீர் குடித்தால் சிறுநீரகம் பழுதாகி விடும். வாழைத்தண்டு, பூசணி, சுரைக்காய், சுண்டைக்காய், பாகற்காய் போன்றவற்றை சாப்பிட வேண்டும் என்றார்.
தமிழ்ப்பல்கலைக்கழக துணைவேந்தர் பாலசுப்பிரமணியன் பேசியதாவது:-
தமிழர்கள் உணவே மருந்து என்னும் நெறியில் வாழ்ந்தனர். ஆனால் அது இன்று மாறி சிலருக்கு மருந்தே உணவாகி விட்டது. நில அமைப்புக்கும், காலநிலைக்கும் ஏற்றவகையில் அந்தந்த பகுதியில் கிடைக்கும் உணவே சிறந்த உணவாகும். பிற பண்பாட்டு தொடர்புகளால் குறிப்பிட்ட பகுதியின் உணவு முறைகள் பிற நிலப்பகுதிகளிலும் பரவிவருவது தடுக்க முடியாததாகி விட்டது. இவ்வாறே மிளகு அதிகமாக பயன்படுத்தப்பட்டு வந்த சூழ்நிலையில் மிளகாய் உள் நுழைந்தது. சிலி நாட்டில் இருந்து இந்தியாவிற்கு மிளகாய் இறக்குமதி ஆகியுள்ளது. பெரும்பாலான தானியங்கள் நமது மண்ணை சார்ந்தவை என்பதால் இன்று சிறுதானியத்தின் மீதான அடிப்படை புரிதல் பரவலாகியுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
கருத்தரங்கில் பேராசிரியர் ராம.சுந்தரம், பதிவாளர் முத்துக்குமார், வளர்தமிழ் புல முதன்மையர் சுப்பிரமணியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். தொடக்கத்தில் துறை தலைவர் தியாகராஜன் வரவேற்றார். முடிவில் பேராசிரியர் கமலதியாகராசன் நன்றி கூறினார்.

Related Tags :
Next Story