“கருணாநிதியே நம்பாத மு.க.ஸ்டாலினை மக்கள் எப்படி நம்புவார்கள்” எடப்பாடி பழனிசாமி பேச்சு
கருணாநிதியே நம்பாத மு.க.ஸ்டாலினை மக்கள் எப்படி நம்புவார்கள் என்று குன்னத்தில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
பெரம்பலூர்,
சிதம்பரம் (தனி) நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் சந்திரசேகரை ஆதரித்து பெரம்பலூர் மாவட்டம் குன்னத்தில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று மாலை திறந்த வேனில் நின்றபடி பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-
மக்களுக்காக உழைக்கின்ற கட்சிகள் எங்களுடைய கூட்டணி கட்சிகள். கூட்டணி கட்சியான பாரதீய ஜனதாவை சேர்ந்த நரேந்திர மோடியை மீண்டும் பிரதமராக்க, சிதம்பரம் (தனி) நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் சந்திரசேகருக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டுகிறேன்.
மு.க.ஸ்டாலினை, அவருடைய தந்தை கருணாநிதி கூட நம்பவில்லை. உடல்நிலை சரியில்லாமல் இருந்த போது கூட கருணாநிதி, மு.க.ஸ்டாலினுக்கு தி.மு.க. தலைவர் பதவியை கொடுக்கவில்லை. கருணாநிதி 2 வருடம் பேச முடியாமல் இருந்த போது, அவருக்கு தெரியாமலே மு.க.ஸ்டாலின் கட்சி கூட்டத்தை நடத்தி தி.மு.க. செயல் தலைவர் பதவியை பெற்றவர்.
கருணாநிதி இறந்த பிறகு தான் ஸ்டாலின் தி.மு.க. தலைவராக முடிந்தது. தந்தை கருணாநிதியே நம்பாத மு.க.ஸ்டாலினை மக்கள் எப்படி நம்புவார்கள். இந்த தொகுதியில் உள்ள வெள்ளாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலமும் மற்றும் தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளது. இன்னும் நிறைய திட்டங்கள் செய்யவுள்ளோம்.
இவ்வாறு அவர் பேசினார்.

Related Tags :
Next Story