அ.தி.மு.க. வேட்பாளர் தம்பிதுரை வீதி-வீதியாக வாக்குசேகரிப்பு பொதுமக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்


அ.தி.மு.க. வேட்பாளர் தம்பிதுரை வீதி-வீதியாக வாக்குசேகரிப்பு பொதுமக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்
x
தினத்தந்தி 10 April 2019 10:30 PM GMT (Updated: 10 April 2019 8:37 PM GMT)

கரூர் நகராட்சிக்கு உட்பட்ட கோதூர் பகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் தம்பிதுரை வீதி, வீதியாக சென்று வாக்கு சேகரித்தார். அப்போது பொதுமக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

கரூர்,

கரூர் நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் தம்பிதுரை கரூர் நகராட்சிக்கு உட்பட்ட கோதூர் பகுதியில் வீதி-வீதியாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:-

உள்ளாட்சி தேர்தல் ஆயத்த பணிகள் தீவிரமாக நடந்த போது, கோர்ட்டில் வழக்கு போட்டு நிறுத்தியது, ஏழை-எளியோருக்கு ரூ.2 ஆயிரம் வழங்குவதை வழக்கு போட்டு தடுத்ததும் தி.மு.க. என்பது மக்களாகிய உங்களுக்கு நன்றாக தெரியும். உள்ளாட்சி தேர்தல் பணிகள் தீவிரமாக நடந்து கொண்டிருந்த போது, தி.மு.க.வின் செயல்பாட்டினால் தான் அது நிறுத்தப்பட்டது. அ.தி.மு.க. அரசு மக்களை தேடி சென்று குறைகளை தீர்த்து வைப்பதில் முனைப்புடன் செயல்பட்டது. அந்த திட்டங்களை மக்களுக்கு கிடைக்கவிடாமல் செய்கிறது தி.மு.க. இவ்வாறு அவர் பேசினார்.

அதனைதொடர்ந்து போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேசுகையில், கரூர் நகராட்சி பகுதியில் இன்னும் 2 இரண்டு மாதத்தில், அனைத்து வார்டு பகுதி மக்களுக்கும் 2 நாட்களுக்கு ஒரு முறை காவிரி குடிநீர் கிடைக்கும். என்றார்.

வாக்குசேகரிப்பின்போது, கரூர் நகர செயலாளர் வை.நெடுஞ்செழியன், பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணை பொது செயலாளர் பி.எம்.கே. பாஸ்கரன், தேசிய முற்போக்கு திராவிட கழக துணை செயலாளர் அரிவின்ஸ், பா.ஜ.க. கரூர் நாடாளுமன்ற பொறுப்பாளர் சிவசாமி ஆகியோர் உடன் இருந்தனர்.

Next Story