“மக்கள் நலத்திட்டங்கள் தொடர இரட்டை இலை சின்னத்துக்கு ஆதரவு தாருங்கள்” அ.தி.மு.க. வேட்பாளர் மனோஜ் பாண்டியன் வேண்டுகோள்


“மக்கள் நலத்திட்டங்கள் தொடர இரட்டை இலை சின்னத்துக்கு ஆதரவு தாருங்கள்” அ.தி.மு.க. வேட்பாளர் மனோஜ் பாண்டியன் வேண்டுகோள்
x
தினத்தந்தி 11 April 2019 3:15 AM IST (Updated: 11 April 2019 4:21 AM IST)
t-max-icont-min-icon

“மக்கள் நலத்திட்டங்கள் தொடர இரட்டை இலை சின்னத்துக்கு ஆதரவு தாருங்கள்” என அ.தி.மு.க. வேட்பாளர் மனோஜ் பாண்டியன் பேசினார்.

அம்பை, 

நெல்லை நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் மனோஜ் பாண்டியன் நேற்று கல்லிடைக்குறிச்சி, அம்பை பகுதிகளில் வாக்கு சேகரித்தார். காலையில் கல்லிடைக்குறிச்சி நகரப்பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியிலும், மாலையில் அம்பை யூனியன் கோடாரங்குளம், அயன்திருவாலீஸ்வரம், மன்னார்கோவில், வாகைகுளம், பிரம்மதேசம், பாப்பாக்குடி யூனியன் சாட்டுப்பத்து, அம்பை நகராட்சி கோவில்குளம், ஊர்க்காடு, புதுக்கிராமம் தெரு, மேலப்பாளையம் தெரு, சந்தைமடம் தெரு உள்ளிட்ட நகராட்சி பகுதிகளில் அவர் வாக்கு சேகரித்தார்.

அப்போது அவர் பேசுகையில், “நான் ஏற்கனவே சேரன்மாதேவி சட்டமன்ற உறுப்பினராகவும், மேல்சபை எம்.பி.யாகவும் இருந்து எனது மாவட்டத்தில் பல்வேறு பணிகளை நிறைவேற்றி உள்ளேன். மக்களின் அடிப்படை வசதிகளான குடிநீர் வசதி, சாலை வசதிகளை எனது நிதியில் இருந்து செய்து கொடுத்துள்ளேன். மேலும் பல்வேறு பகுதிகளில் ஏழை மக்களின் வசதிக்காக திருமண மண்டபம் கட்டிக் கொடுத்துள்ளேன். மக்கள் நலத்திட்டங்கள் தொடர இரட்டை இலை சின்னத்துக்கு ஆதரவு தாருங்கள்” என்றார்.

நிகழ்ச்சியில் முருகையா பாண்டியன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. சக்திவேல் முருகன், மாவட்ட துணை செயலாளர் முத்துசாமி, இளைஞர் பாசறை இணை செயலாளர் வெங்கட்ராமன், நகர செயலாளர்கள் கல்லிடைகுறிச்சி சங்கரநாராயணன், அம்பை அறிவழகன், கூட்டுறவு துணை தலைவர் பிராங்களின், பா.ஜ.க ஒன்றிய தலைவர் பார்த்திபன், நகர தலைவர் அரிராம், தே.மு.தி.க. மாவட்ட துணை செயலாளர் அய்யப்பன், அம்பை நகர செயலாளர் விஜய் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story