மும்பை விமான நிலையத்தில் `ஷூ'வில் மறைத்து ரூ.38 லட்சம் தங்க கட்டிகள் கடத்தியவர் கைது
மும்பை விமான நிலையத்தில் `ஷூ'வில் மறைத்து ரூ.38 லட்சம் தங்க கட்டிகள் கடத்தி வந்த பயணி கைது செய்யப்பட்டார்.
மும்பை,
மும்பை சர்வதேச விமான நிலையத்தில் நேற்று முன்தினம் பாங்காக்கில் இருந்து வந்த விமானம் ஒன்று தரையிறங்கியது. அந்த விமானத்தில் வந்திறங்கிய ஒரு பயணி அணிந்திருந்த ‘ஷூ’வின் அடிப்பகுதி பெரிதாக இருந்தது. இது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படையினருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.
இதையடுத்து அவர்கள் அந்த பயணியை பிடித்து அவர் அணிந்திருந்த ‘ஷூ’வை கழற்றி சோதனை போட்டனர். இந்த சோதனையின் போது, ‘ஷூ’வின் அடி பகுதியில் 2 தங்கக்கட்டிகள் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து அந்த தங்கக்கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. அந்த தங்கக்கட்டிகள் 1 கிலோ 200 கிராம் எடை கொண்டவையாக இருந்தன. அவற்றின் மதிப்பு ரூ.38 லட்சம் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் சாகர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
போலீசார் அந்த பயணியை கைது செய்து விசாரித்தனர். இதில், அவரது பெயர் பிரவின் சிங் என்பதும், அவர் ஆமதாபாத்துக்கு தங்கக்கட்டிகளை கடத்தி கொண்டு செல்ல இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story