தொழிலாளியை கொன்ற 3 சகோதரர்களுக்கு ஆயுள் தண்டனை நாகர்கோவில் கோர்ட்டு தீர்ப்பு
தொழிலாளியை கொலை செய்த 3 சகோதரர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து நாகர்கோவில் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
நாகர்கோவில்,
நாகர்கோவில் அருகே தம் மத்துக்கோணத்தை சேர்ந்தவர் செல்வராஜ். இவருக்கு மணி கண்டன் (வயது 31), அய்யப் பன் (32) மற்றும் பாபு (34) ஆகிய 3 மகன்கள் உள்ளனர். அதே பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார் (40). வலை கம்பெனியில் தொழி லாளி யாக வேலை பார்த்து வந்த £ர்.
இந்த நிலையில் அப்பகுதியில் நடந்த கோவில் திருவிழாவின் போது செல்வராஜிக்கும், செல்வகுமாருக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டது. அந்த சமயத்தில் செல்வகுமார் தாக்கியதில் செல்வராஜிக்கு கை எலும்பு உடைந்தது. இத னையடுத்து செல்வ குமாருக் கும், செல்வராஜின் மகன்களுக்கும் முன்விரோதம் ஏற்பட்டது.
தந்தையை தாக்கிய செல்வகுமாருக்கு சரியான பாடம் கற்பிக்க வேண்டும் என்று மணிகண்டன் உள்ளி ட்ட சகோதரர்கள் நினைத் தனர். பின்னர் அவரை கொலை செய்யும் எண்ணம் அவர்களுக்கு உருவானது. இந்த நிலையில் கடந்த 9–6–2011 அன்று செல்வகுமார் தம்மத்துக்கோணம் சந்திப்பில் நடந்து சென்றார்.
அப்போது மணிகண்டன் உள்ளிட்ட 3 பேரும் ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த னர். பின்னர் 3 பேரும் சேர்ந்து செல்வகுமாரை தடுத்து நிறுத்தி திடீரென அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இந்த கொடூர தாக்குதலில் செல்வகுமார் சம்பவ இடத் திலேயே துடிதுடித்து இறந் தார். இதைத் தொடர்ந்து சகோதரர்கள் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர். இந்த சம்பவம் குறித்து ராஜாக்கமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு நாகர்கோவிலில் உள்ள கூடு தல் மாவட்ட கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கின் விசாரணையை நீதிபதி அப்துல்காதர் நடத்தினார். இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.
அப்போது கொலை செய்த குற்றத்துக்காக மணிகண்டன், அய்யப்பன் மற்றும் பாபு ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்ததோடு, செல்வகுமாரை தடுத்து நிறுத்திய குற்றத்துக்காக 6 மாதம் ஜெயில் தண்டனையும், ரூ.500 அபராதமும் விதித்து நீதிபதி அப்துல் காதர் தீர்ப்பு அளித்தார்.
இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டு இருந்தது. இந்த வழக்கில் அரசு தரப்பில் குற்றவியல் வக்கீல் ஞானசேகர் ஆஜராகி வாதாடினார்.

Related Tags :
Next Story