திருவண்ணாமலை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் செலவினங்கள் இணையதளத்தில் வெளியீடு பொதுமக்கள் பார்க்கலாம்
திருவண்ணாமலை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் செலவு கணக்குகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் பார்வையிடலாம் என கலெக்டர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை,
தமிழகத்தில் வருகிற 18-ந் தேதி (வியாழக்கிழமை) நாடாளுமன்றம் மற்றும் 18 சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் 25 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
வேட்பாளர்களின் செலவின பதிவேடுகள் குறித்த 2-வது கட்ட ஆய்வு கடந்த 10-ந் தேதி தேர்தல் செலவின பார்வையாளர்கள் பத்மராம்மிர்தா, அனில்குமார் மற்றும் தேர்தல் செலவின கண்காணிப்பாளர் வெங்கட்ராமன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (கணக்குகள்) ஆகியோர் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது. அப்போது வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு செலவின பதிவேடுகளை சமர்ப்பித்தனர்.
இந்த நிலையில் வேட்பாளர்களின் செலவின பதிவேடுகள் tiruvannamalai.nic.in/ca-n-ddate expenditu-re/ என்ற இணைய தள முகவரியில் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது.
வேட்பாளர்கள் செலவினம் குறித்த விவரங்களை பொதுமக்கள் இந்த இணையதள முகவரியிலும், www.elections.tn.gov.in என்ற இணையதள முகவரியிலும் பார்க்கலாம்.
இந்த தகவலை மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான கே.எஸ்.கந்தசாமி தெரிவித்து உள்ளார்.
Related Tags :
Next Story