தேர்தலையொட்டி 4 நாட்கள் மதுக்கடைகள் மூடப்படும் கலெக்டர் பிரபாகர் தகவல்


தேர்தலையொட்டி 4 நாட்கள் மதுக்கடைகள் மூடப்படும் கலெக்டர் பிரபாகர் தகவல்
x
தினத்தந்தி 11 April 2019 10:30 PM GMT (Updated: 11 April 2019 5:56 PM GMT)

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேர்தலையொட்டி 4 நாட்கள் மதுக்கடைகள் மூடப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கிருஷ்ணகிரி, 

இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதி தேர்தல் மற்றும் ஓசூர் சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் வருகிற 18-ந் தேதி நடைபெறு கிறது. இந்த தேர்தலை அமைதியாக நடத்த வருகிற 16-ந் தேதி காலை 10 மணி முதல் 18-ந் தேதி நள்ளிரவு 12 மணி வரை (3 நாட்கள்) மற்றும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளான மே 23-ந் தேதி என மொத்தம் 4 நாட்கள் மதுபானங்களை விற்பனை செய்யவோ அல்லது கொண்டு செல்லவோ தமிழ்நாடு முழுவதும் தடை செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அரசு மதுபான சில்லரை விற்பனை கடைகள் (டாஸ்மாக்), மதுக் கூடங்கள் மற்றும் மதுக்கூடங்களுக்கான உரிமம் பெற்றுள்ள அரசு மற்றும் தனியார் ஓட்டல்களில் உள்ள மதுபானக்கடைகள் 4 நாட்கள் மூடப்படும். இந்த உத்தரவை மீறி விற்பனையாளர்கள் மதுக்கடைகளை திறந்தாலும், விற்றாலும், கொண்டு சென்றாலும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story