மாவட்ட செய்திகள்

விருதுநகரில், இரும்புக்கம்பியால் தாக்கி தாயை கொன்ற வாலிபர் கைது + "||" + Virudhunagar, The young man kills the mother and killed the iron man

விருதுநகரில், இரும்புக்கம்பியால் தாக்கி தாயை கொன்ற வாலிபர் கைது

விருதுநகரில், இரும்புக்கம்பியால் தாக்கி தாயை கொன்ற வாலிபர் கைது
விருதுநகரில் இரும்புக்கம்பியால் தாக்கி தாயைக்கொன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
விருதுநகர், 


விருதுநகர் மருதநத்தம் கிராமம் மேலத்தெருவை சேர்ந்தவர் சந்திரன். இவருடைய மனைவி சுப்புத்தாய்(வயது 52). இவர்களது மகன் குருசாமி (26). இவர் வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். இதனை பெற்றோர் கண்டித்து வந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று தனது தாயாரிடம் செலவுக்கு பணம் தருமாறு குருசாமி கேட்டுள்ளார். அப்போது சுப்புத்தாய் பணம் தரமறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த குருசாமி இரும்புக் கம்பியால் தாய் என்றும் பாராமல் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த சுப்புத்தாய் சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் பரிதாபமாக இறந்துபோனார்.

இதுகுறித்த தகவலின்பேரில் ஆமத்தூர் போலீசார் விரைந்து சென்று வாலிபர் குருசாமியை கைது செய்தனர்.

பெற்ற தாயை மகனே கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

தொடர்புடைய செய்திகள்

1. திண்டிவனம் பகுதியில், தொடர் திருட்டில் ஈடுபட்ட வாலிபர் கைது - 32 செல்போன்கள் மீட்பு
திண்டிவனம் பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 32 செல்போன்கள் மீட்கப்பட்டது.
2. விருதம்பட்டில் ரூ.10 லட்சம் கேட்டு தொழிலதிபரை கடத்திய வாலிபர் கைது - ரவுடி ஜானிக்கு வலைவீச்சு
விருதம்பட்டில் ரூ.10 லட்சம் கேட்டு தொழிலதிபரை கடத்திய வழக்கில் வாலிபர் கைது செய்யப்பட்டார். தலைமறைவான ரவுடி ஜானியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
3. தாயை அவதூறாக பேசியதால் ஆத்திரம் - அண்ணனை கொலை செய்த வாலிபர் கைது
தாயை அவதூறாக பேசியதால் ஆத்திரமடைந்து அண்ணனை கட்டையால் தாக்கி கொலை செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
4. திருத்துறைப்பூண்டியில், லோடு வேனில் கடத்தி வந்த 576 மதுபாட்டில்கள் பறிமுதல் - வாலிபர் கைது
திருத்துறைப்பூண்டியில் லோடு வேனில் கடத்தி வந்த 576 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து, வாலிபரை கைது செய்தனர்.
5. தூத்துக்குடி அருகே, தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு - வாலிபர் கைது
தூத்துக்குடி அருகே தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணிடம் தங்க சங்கிலியை பறித்துச் சென்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-