சில்லரை தகராறில் பஸ் மீது கல்வீசிய வாலிபர் கைது


சில்லரை தகராறில் பஸ் மீது கல்வீசிய வாலிபர் கைது
x
தினத்தந்தி 11 April 2019 11:33 PM GMT (Updated: 11 April 2019 11:33 PM GMT)

சில்லரை தகராறில் பஸ் மீது கல்வீசிய வாலிபர் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் பயணி ஒருவர் காயம் அடைந்தார்.

மும்பை,

மும்பை குர்லா நேரு நகரில் இருந்து சம்பவத்தன்று சாந்தாகுருஸ் நோக்கி பெஸ்ட் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பஸ்சில் கண்டக்டர் பிரகாஷ் என்பவர் பணியில் இருந்தார். பஸ்சில் இருந்த குர்லா நேரு நகரை சேர்ந்த சுபேர் கான் (வயது26) என்பவர் டிக்கெட் வாங்க 100 ரூபாய் நோட்டை கொடுத்தார். கண்டக்டர் 100 ரூபாயுக்கு தன்னிடம் சில்லரை இல்லை என கூறினார். தன்னிடமும் டிக்கெட்டுக்கான சரியான சில்லரை இல்லை என சுபேர் கான் கூறினார். இதனால் கோபம் அடைந்த கண்டக்டர் பிரகாஷ், அவரை பஸ்சில் இருந்து இறங்குமாறு கூறினார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் பஸ்சை விட்டு கீழே இறங்கிய சுபேர் கான் அங்கு கிடந்த கல்லை எடுத்து பஸ்சின் மீது எறிந்தார்.

அந்த கல் ஜன்னல் ஓரமாக இருந்த பயணியின் முகத்தில் பட்டது. இதில் அந்த பயணி காயம் அடைந்தார். அவரது முகத்தில் இருந்து ரத்தம் சொட்டியது. இதனை கண்ட கண்டக்டர் உடனடியாக சம்பவம் குறித்து போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார்.

தகவல் அறிந்ததும் நேருநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயமடைந்த பயணியை மீட்டு ராஜவாடி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கல்வீசிய சுபேர் கானை மடக்கி பிடித்து கைது செய்தனர். மேலும் அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story