விண்வெளியில் மிதந்த பர்கர்


விண்வெளியில் மிதந்த பர்கர்
x
தினத்தந்தி 12 April 2019 1:04 PM IST (Updated: 12 April 2019 1:04 PM IST)
t-max-icont-min-icon

டீன்-ஏஜ் வயதினரை கவரக்கூடிய வீடியோ

இங்கிலாந்தை சேர்ந்த தாமஸ் ஸ்டானிலேண்ட், ‘கில்லெம்’ என்ற யூ-டியூப் சேனலை நடத்தி வருகிறார். இதில் புதுமையான, அதேசமயம் டீன்-ஏஜ் வயதினரை கவரக்கூடிய வீடியோக்களை பதிவேற்றுவதுதான், தாமஸின் வேலை.

கார், பீர், பொம்மை போன்ற உயிரற்ற பொருட்களை வாயு பலூன்களின் உதவியுடன் விண் வெளிக்கு அனுப்பி, சில காலம் விண்வெளியில் உலாவ விடுவது இன்றைய டிரெண்டாகி இருப்பதால், தாமஸும் அத்தகைய முயற்சியில் இறங்கினார். இவர் கையில் எடுத்தது, உணவு பொருளான பர்கர்.

கோ-புரோ கேமரா, பலூன் நகரும் இடத்தை கண்டுபிடிக்கும் டிராக்கர் போன்ற கருவிகள் அடங்கிய பெட்டியில் மெக்டோனல்ஸ் நிறுவனத்தின் ‘பிக் மேக்’ பர்கரையும் வைத்து, வாயு பலூன்களின் உதவியோடு வானில் பறக்கவிட்டார். அதற்கு ‘மெக் ஆர்ம்ஸ்டிராங்’ என்று பெயர் சூட்டிய தாமஸ், பலூன் பறக்கும் திசையை கண்காணித்தபடி காரில் பின் தொடர்ந்தார்.

இங்கிலாந்தின் செப்பீல்ட் பகுதியில் பறக்கவிடப்பட்ட ‘மெக் ஆர்ம்ஸ்டிராங்’ பர்கர் பலூன், 100 மைல்கள் தூரம் வெற்றிகரமாக பயணித்து, கோல்செஷ்டர் பகுதியில் இருக்கும் கால்பந்தாட்ட மைதானத்தில் விழுந்தது.

‘‘கடுங்குளிரும், கடும்வெயிலும் விண்வெளியில் மிதந்த பலூனை பாதித்திருக்கிறது. அதனால்தான் ‘மெக் ஆர்ம்ஸ்டிராங்’ பர்கர் பலூன் வெடித்து கோல்செஷ்டர் பகுதியில் விழுந்துள்ளது. இல்லையெனில் வெகுதூரம் பறந்திருக்கும்.

‘மெக் ஆர்ம்ஸ்டிராங்’ தரையில் விழுந்ததை கவனித்த மைதான ஊழியர்கள், அதில் எழுதப்பட்டிருந்த தகவல்களை படித்து, என்னுடைய வருகைக்காக காத்திருந்தனர். நானும் அவர்களுக்கு திராட்சை ரசம் மற்றும் சாக்லேட்டுகளை நன்றி பரிசாக கொடுத்து, பர்கர் பாக்ஸை திரும்ப பெற்றுவந்தேன்’’ என்கிறார், தாமஸ்.

விண்வெளியில் மிதந்து வந்த பர்கரை சுவைபார்த்த தாமஸ், கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை தன்னுடைய யூ-டியூப் சேனலில் வெளியிட்டுள்ளார்.


Related Tags :
Next Story