மாவட்ட செய்திகள்

மோகனூரில் வாக்கு சேகரிப்பின் போது இருதரப்பினர் மோதல்; 2 பேர் கைது 31 பேர் மீது வழக்கு + "||" + In Mohanur Bilateral confrontation during polling; 2 people arrested The case was filed against 31 people

மோகனூரில் வாக்கு சேகரிப்பின் போது இருதரப்பினர் மோதல்; 2 பேர் கைது 31 பேர் மீது வழக்கு

மோகனூரில் வாக்கு சேகரிப்பின் போது இருதரப்பினர் மோதல்; 2 பேர் கைது 31 பேர் மீது வழக்கு
மோகனூரில் வாக்கு சேகரிப்பின் போது இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 31 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மோகனுர், 

நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக நாமக்கல் ஏ.எஸ். பேட்டையை சேர்ந்த என்.கே.எஸ்.சக்திவேல் என்பவர் பிர‌ஷர் குக்கர் சின்னத்தில் போட்டியிடுகிறார். இவர் நேற்று முன்தினம் மோகனூர் வாரச்சந்தை பகுதியில் தனது ஆதரவாளர்களுடன் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வினியோகம் செய்து வாக்கு சேகரித்து கொண்டிருந்தார்.

அப்போது அந்த துண்டு பிரசுரத்தை ஒருவர் கிழித்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அந்த நபரை சக்திவேலின் ஆதரவாளர்கள் தாக்கியதாக தெரிகிறது. இதைத் தொடர்ந்து அவர் தனது உறவினர்கள் சிலரை அழைத்து வந்தார். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இதில் சிலர் காயம் அடைந்தனர். இது குறித்து சுயேச்சை வேட்பாளர் சத்திவேல் மோகனூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் 15 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், ஒருவந்தூரை சேர்ந்த அ.தி.மு.க. கிளை செயலாளர் பிரபாகரன் (வயது 50), ரஞ்சித் (27) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

இதே போல மற்றொரு தரப்பை சேர்ந்த பாஸ்கர் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் சக்திவேல், ராதாமணாளன், சசிகுமார், செந்தில், கதிரேசன் உள்பட 16 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இரு தரப்பு புகார் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தொடர்புடைய செய்திகள்

1. பெண் உள்பட 6 பேரை தாக்கிய வழக்கு: 7 பேருக்கு ஜெயில் தண்டனை - தென்காசி கோர்ட்டு தீர்ப்பு
பெண் உள்பட 6 பேரை தாக்கிய வழக்கில் 7 பேருக்கு ஜெயில் தண்டனை விதித்து தென்காசி கோர்ட்டு தீர்ப்பளித்தது.
2. ஆசைவார்த்தை கூறி பிளஸ்-1 மாணவியை கர்ப்பமாக்கிய கட்டிட தொழிலாளி கைது
பெத்தநாயக்கன்பாளையத்தில் ஆசைவார்த்தை கூறி, பிளஸ்-1 மாணவியை கர்ப்பமாக்கிய கட்டிட தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
3. சேலத்தில், 2 நாட்களில் ‘ஹெல்மெட்’ அணியாமல் சென்ற 2,300 பேர் மீது வழக்கு - போலீசார் அதிரடி நடவடிக்கை
சேலத்தில் கடந்த 2 நாட்களில் மட்டும் ‘ஹெல்மெட்‘ அணியாமல் சென்ற 2,300 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து அதிரடி நடவடிக்கை எடுத்தனர்.
4. திருப்பூரில், கலெக்டர் அலுவலக பெண் ஊழியர் வீட்டில் ரூ.14 லட்சம் திருடிய 2 பேர் கைது
திருப்பூரில் கலெக்டர் அலுவலக பெண் ஊழியர் வீட்டில் ரூ.14 லட்சம் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
5. வல்லம் அருகே, மணல் கடத்தி வந்த சரக்கு ஆட்டோக்கள் பறிமுதல் - 2 பேர் கைது
வல்லம் அருகே மணல் கடத்தி வந்த சரக்கு ஆட்டோக்களை போலீசார் பறிமுதல் செய்ததுடன், 2 பேரை கைது செய்தனர்.

அதிகம் வாசிக்கப்பட்டவை