‘தினத்தந்தி’ மற்றும் ‘சத்யா’ இணைந்து நடத்தும் வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சி சென்னையில் இன்று தொடங்கியது


‘தினத்தந்தி’ மற்றும் ‘சத்யா’ இணைந்து நடத்தும் வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சி சென்னையில் இன்று தொடங்கியது
x
தினத்தந்தி 12 April 2019 8:08 PM IST (Updated: 12 April 2019 8:08 PM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ மற்றும் ‘சத்யா’ இணைந்து நடத்தும் வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சி சென்னையில் இன்று தொடங்கியது.

சென்னை,

‘தினத்தந்தி’ மற்றும் ‘சத்யா’ இணைந்து நடத்தும் வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சி சென்னையில் இன்று தொடங்கியது.

கண்காட்சி

‘தினத்தந்தி’ மற்றும் ‘சத்யா’ இணைந்து நடத்தும் எலக்ட்ரானிக்ஸ், செல்போன் மற்றும் பர்னிச்சர் போன்ற வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சி சென்னை ராயப்பேட்டை, ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் உள்ள விங்ஸ் கன்வென்ஷன் சென்டரில் இன்று தொடங்கியது.

3 நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சி 14-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை நடைபெறுகிறது. இந்த கண்காட்சியை பூர்விகா மொபைல்ஸ், ஆச்சி மசாலா, பைசன் கிளனிங் தயாரிப்புகள் மற்றும் அடையார் ஆனந்தபவன் ஆகிய முன்னணி நிறுவனங்கள் இணைந்து வழங்குகின்றன.

சலுகைகள்

100-க்கும் மேற்பட்ட அரங்குகள் கொண்ட இந்த கண்காட்சியில் உலகத்தரம் வாய்ந்த எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், ஏற்றுமதி தரத்துடன் கூடிய பர்னிச்சர் வகைகள் உள்பட வீட்டு உபயோக பொருட்கள், ரியல் எஸ்டேட், வாகனங்கள் மற்றும் உணவு பொருட்கள் இடம்பெறுகின்றன.

தமிழ் புத்தாண்டையொட்டி கண்காட்சியில் எலக்ட்ரானிக்ஸ், செல்போன் ஆகியவற்றுக்கு கவர்ச்சிகரமான சலுகைகள் அளிக்கப்பட உள்ளன. அதேபோல், பர்னிச்சர் வகைகளுக்கு ‘எக்ஸ்சேஞ்ச்’ சலுகை, மோட்டார் சைக்கிள்கள், கார்களுக்கு சுலப தவணைகள், வீடு மற்றும் வீட்டுமனை திட்டங்கள், உணவு வகைகளுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட இருக்கின்றன.

டி.வி. மற்றும் ஏ.சி.க்கள்...

எல்.இ.டி. டி.வி., ஏ.சி., ஏர்கூலர், ஹோம் தியேட்டர், எலக்ட்ரிக் ரைஸ் குக்கர், வாட்டர் ஹீட்டர் மற்றும் எலக்ட்ரிக் கெட்டில் ஆகியவை குறைந்த விலையில் கிடைக்கும். சமீ பத்திய மாடல் வாஷிங் மெஷின்கள் மற்றும் பிரிட்ஜ் ஆகியவையும் தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்பட உள்ளன.

முன்பணம் இல்லாமல், மாதாந்திர தவணை முறையில் பொருட்கள் வாங்குவதற்கு மறைமுக கட்டணங்கள் இன்றி உடனடி லோன் வசதி செய்து தரப்படும். காலை 10 மணி முதல் இரவு 8.30 மணி வரை கண்காட்சி நடை பெறும்.
1 More update

Next Story