ஜெயங்கொண்டம் அருகே இரு தரப்பினர் இடையே மோதல்; சிறுவன் உள்பட 5 பேர் கைது
ஜெயங்கொண்டம், கிரிக்கெட் விளையாட்டில் ஏற்பட்ட தகராறில் முன் விரோதம் காரணமாக இரண்டு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர்.
ஜெயங்கொண்டம்,
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் கீழத்தெருவை சேர்ந்தவர் கலியபெருமாள். இவரது மகன் மணிகண்டன்(வயது 27) என்பவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ஜெயராமன் மகன் பாரத் (21) என்பவருக்கும் இடையே கிரிக்கெட் விளையாட்டில் ஏற்பட்ட தகராறில் முன் விரோதம் ஏற்பட்டது. இதன் காரணமாக தகராறு ஏற்பட்டு இரண்டு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர்.
இதில் மணிகண்டன் கொடுத்த புகாரின் பேரில் 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அதில் ராஜேந்திரன் மகன் செல்வம்(25), ராமலிங்கம் மகன் மின்னல்ராஜா(36) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இதேபோல் பாரத் கொடுத்த புகாரின் பேரில் 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அன்பழகன் மகன் மகேந்திரன்(20), வீரமணி மகன் கார்த்திக்(19) மற்றும் ஒரு சிறுவன் ஆகியோரை கைது செய்தனர். இதில் 3 பேர் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தலைமறைவாக உள்ள மற்றவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story