கீழ்வேளூர் அருகே, அனுமதியின்றி மணல் அள்ளிய 2 பேர் கைது - லாரி பறிமுதல்


கீழ்வேளூர் அருகே, அனுமதியின்றி மணல் அள்ளிய 2 பேர் கைது - லாரி பறிமுதல்
x
தினத்தந்தி 13 April 2019 4:15 AM IST (Updated: 13 April 2019 1:49 AM IST)
t-max-icont-min-icon

கீழ்வேளூர் அருகே அனுமதியின்றி மணல் அள்ளிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து லாரியை பறிமுதல் செய்தனர்.

நாகப்பட்டினம்,

நாகை மாவட்டத்தில் மணல் கடத்தலை தடுக்கும் வகையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் போலீசார் பல்வேறு இடங்களில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் கீழ்வேளூர் போலீஸ் சரகம் இலுப்பூர் சத்திரம் அருகே கீழ்வேளூர் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த லாரியை மறித்து சோதனை செய்தனர். அதனை தொடர்ந்து லாரியில் வந்தவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அவர்கள் திருக்குவளை பாங்கல் மேலத்தெருவை சேர்ந்த சரவணன் (வயது38), கச்சனம் சிவன் கோவில் தெருவை சேர்ந்த கருணாகரன் மகன் ஐயப்பன் (19) ஆகியோர் என்பதும், அவர்கள் உரிய அனுமதியின்றி கீழ்வேளூர் பகுதியில் உள்ள ஆற்றில் இருந்து மணல் அள்ளி செல்வதும் தெரியவந்தது.

இதுகுறித்து கீழ்வேளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சரவணன், ஐயப்பன் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய லாரியையும் பறிமுதல் செய்தனர். இதில் லாரியின் உரிமையாளர் பாங்கலை சேர்ந்த முருகையன் மகன் கோவிந்தராஜ் என்பவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story