தேர்தல் நடத்தை விதிகளுக்கு உட்பட்டு அதிகாரிகள் பணியாற்ற வேண்டும் - கலெக்டர் அன்புசெல்வன் அறிவுரை


தேர்தல் நடத்தை விதிகளுக்கு உட்பட்டு அதிகாரிகள் பணியாற்ற வேண்டும் - கலெக்டர் அன்புசெல்வன் அறிவுரை
x
தினத்தந்தி 12 April 2019 10:30 PM GMT (Updated: 12 April 2019 11:21 PM GMT)

தேர்தல் நடத்தை விதிகளுக்கு உட்பட்டு அதிகாரிகள் பணியாற்ற வேண்டும் என்று கலெக்டர் அன்பு செல்வன் அறிவுறுத்தினார்.

கடலூர்,

கடலூர் மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் பணிகளை ஒருங்கிணைப்பதற்காக மண்டல தேர்தல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் தேர்தல் பணியில் எவ்வாறு ஈடுபட வேண்டும் என்பது குறித்த பயிற்சி கூட்டம் கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

கூட்டத்துக்கு மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டர் அன்புசெல்வன் தலைமை தாங்கி பேசியதாவது:-

கடலூர் மாவட்டத்தில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் வாக்குப்பதிவு நாளன்றும், வாக்குப்பதிவுக்கு முந்தைய நாளிலும் தேர்தல் தொடர்பாக கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள், பணிகள் குறித்து 195 மண்டல அலுவலர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு எந்திரங்கள், யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் எந்திரங்களையும் கையாள்வது பற்றி மண்டல அலுவலர்கள் அந்தந்த மண்டலங்களில் உள்ள வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கும் விதமாக இப்பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்புடன் பணியாற்ற வேண்டும். வாக்குப்பதிவு சிறப்பாக நடைபெற அனைத்து அலுவலர்களும் ஒற்றுமையுடன் தேர்தல் நடத்தை விதிகளுக்குட்பட்டு பணியாற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இக்கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் பணிகள் குறித்து மண்டல அலுவலர்களுக்கு மின்னணு திரை மற்றும் வாக்குப்பதிவு எந்திரத்தின் மூலம் நேரடி பயிற்சி அளிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆர்.ராஜகிருபாகரன், கடலூர் சப்-கலெக்டர் சரயூ, சிதம்பரம் சப்-கலெக்டர் விசுமகாஜன், விருத்தாசலம் சப்-கலெக்டர் பிரசாந்த், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சந்தோஷினி சந்திரா மற்றும் அனைத்து மண்டல அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story