மும்பையில் உள்ள 6 நாடாளுமன்ற தொகுதிகளில் 116 பேர் போட்டி : இறுதிவேட்பாளர் பட்டியல் வெளியீடு


மும்பையில் உள்ள 6 நாடாளுமன்ற தொகுதிகளில் 116 பேர் போட்டி : இறுதிவேட்பாளர் பட்டியல் வெளியீடு
x
தினத்தந்தி 13 April 2019 5:53 AM IST (Updated: 13 April 2019 5:53 AM IST)
t-max-icont-min-icon

மும்பையில் உள்ள 6 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் மொத்தம் 116 பேர் போட்டியிடுகிறார்கள்.

மும்பை, 

மராட்டியத்தில் 4 கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் நேற்றுமுன்தினம் முதல் கட்டமாக 7 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்தது. இதில் 62 சதவீத வாக்குகள் பதிவானது.

வருகிற 18-ந் தேதி 2-ம் கட்டமாக 10 தொகுதிகளுக்கும், 23-ந் தேதி 3-ம் கட்டமாக 14 தொகுதிகளிலும் தே்ாதல் நடக்கிறது. இந்த தொகுதிகளுக்கான இறுதி வேட்பாளர்கள் பட்டியல் ஏற்கனவே வெளியிடப்பட்டு விட்டன. எனவே இந்த தொகுதிகளில் வேட்பாளர்கள் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

4-ம் கட்டமாக மும்பையில் உள்ள தென்மும்பை, தென்மத்திய மும்பை, வட மும்பை, வடமத்திய மும்பை, வடகிழக்கு மும்பை, வடமேற்கு மும்பை மற்றும் தானே, கல்யாண், பிவண்டி, பால்கர், நாசிக், தின்டோரி, துலே, நந்துர்பர், மாவல், சிரூர், ஷீரடி ஆகிய 17 தொகுதிகளுக்கு வருகிற 29-ந்தேதி தேர்தல் நடக்கிறது.

இந்த தொகுதிகளுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 2-ந்தேதி தொடங்கி 9-ந்தேதி வரை நடந்தது. மனுக்கள் மீது 10-ந்தேதி பரிசீலனை நடந்தது.

நேற்று வேட்பு மனுக் களை வாபஸ் பெற கடைசி நாளாகும். அப்போது வேட்பாளர்கள் பலர் தங்களது மனுக்களை திரும்ப பெற்றனர். இதையடுத்து மாலையில் இந்த 17 தொகுதிகளிலும் இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டன.

இதில் மும்பையில் உள்ள 6 தொகுதிகளில் மொத்தம் 116 வேட்பாளர்கள் நாடாளுமன்ற தேர்தல் களத்தில் இருக்கிறார்கள். இதில் அதிகப்பட்சமாக வடகிழக்கு மும்பை தொகுதியில் 27 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.

Next Story