மாவட்ட செய்திகள்

தங்கச்சிமடம் பகுதியில் வீடு புகுந்து பணம், பொருட்கள் திருட்டு + "||" + Thangachimadam area Money laundering, goods theft

தங்கச்சிமடம் பகுதியில் வீடு புகுந்து பணம், பொருட்கள் திருட்டு

தங்கச்சிமடம் பகுதியில் வீடு புகுந்து பணம், பொருட்கள் திருட்டு
தங்கச்சிமடம் பகுதியில் வீடு புகுந்து பணம்,பொருட்கள் திருடப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

ராமேசுவரம்,

ராமேசுவரத்தை அடுத்துள்ள தங்கச்சிமடம் பகுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு 6 இடங்களில் மர்ம நபர்கள் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் மெய்யம்புளி தேவசபை அருகே உள்ள இஸ்ரேஸ் பவுலோஸ் என்பவர் தனது குடும்பத்துடன் பிரார்த்தனைக்கு சென்றுவிட்டார். இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் கதவை உடைத்து உள்ளே புகுந்து வீட்டில் இருந்த லேப்டாப், புரோஜெக்டர், செல்போன் உள்ளிட்ட பொருட்கள், ரூ.20 ஆயிரம் ஆகியவற்றை திருடிச்சென்று விட்டனர்.

வீடு திரும்பிய இஸ்ரேஸ் பவுலோஸ் திருடு போயிருப்பதை கண்டு அதிர்ச்சிஅடைந்தார். உடனே அவர் இதுபற்றி தங்கச்சிமடம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதனை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் தேவி, சப்–இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர்.

மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். தங்கச்சிமடம் பகுதியில் தொடர்ந்து திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. கூடலூரில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட தொழிலாளி கைது
கூடலூரில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
2. மல்லசமுத்திரம் அருகே, அடுத்தடுத்து 3 வீடுகளில் 15½ பவுன் நகை, ரூ.1½ லட்சம் திருட்டு
மல்லசமுத்திரம் அருகே, அடுத்தடுத்து 3 வீடுகளில் 15½ பவுன் நகை, ரூ.1½ லட்சம் திருட்டு போனது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
3. ஓடும் பஸ்சில் ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியரிடம் ரூ.1 லட்சம் திருட்டு
ஓடும் பஸ்சில் ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியரிடம் ரூ.1 லட்சம் திருட்டுபோனது.
4. வீட்டின் பூட்டை உடைத்து 15½ பவுன் நகை-வெள்ளி கொலுசுகள் திருட்டு மர்மநபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
வேலாயுதம்பாளையம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 15½ பவுன் நகை-வெள்ளி கொலுசுகளை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
5. லால்குடி அருகே அடுத்தடுத்து 3 வீடுகளில் திருட்டு மற்றொரு வீட்டில் உணவை ‘ருசி’ பார்த்த மர்ம நபர்கள்
லால்குடி அருகே அடுத்தடுத்து 3 வீடுகளில் திருடிய மர்ம நபர்கள் மற்றொரு வீட்டில் சமைத்து வைத்திருந்த உணவை ‘ருசி’ பார்த்தனர்.