கடந்த 2 மாதங்களில் 7 சட்டமன்ற தொகுதிகளிலும் 25,477 புதிய வாக்காளர்கள் சேர்ப்பு 1,759 பேர் நீக்கம்


கடந்த 2 மாதங்களில் 7 சட்டமன்ற தொகுதிகளிலும் 25,477 புதிய வாக்காளர்கள் சேர்ப்பு 1,759 பேர் நீக்கம்
x
தினத்தந்தி 13 April 2019 10:00 PM GMT (Updated: 13 April 2019 8:27 PM GMT)

விருதுநகர் மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களில் 7 சட்டமன்ற தொகுதிகளிலும் 1,759 வாக்காளர்கள் நீக்கப்பட்டு உள்ளனர். 25,477 பேர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

விருதுநகர்,

தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி வாக்குப்பதிவுக்கு முந்தைய தினம் வரை புதிய வாக்காளர்களை சேர்க்க வாய்ப்பு தரப்பட்டு உள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளுக்கும் கடந்த ஜனவரி 31–ந்தேதி வாக்காளர் வரைவு பட்டியல் வெளியிடப்பட்டது.

அதன்படி மாவட்டத்தில் 15,65,698 வாக்காளர் இருந்தனர். இதைத்தொடர்ந்து கடந்த 2 மாதங்களாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் மேற்கொள்ளப்பட்டு வந்தன. அதன்படி பிப்ரவரி மாதம் முதல் மார்ச் 26–ந்தேதி வரை 7 சட்டமன்ற தொகுதிகளிலும் 25,477 புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். 1,759 பேர் நீக்கப்பட்டு உள்ளனர்.

அதன்படி விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளிலும் தொகுதி வாரியாக வாக்காளர்கள் விவரம் வருமாறு:– ராஜபாளையம்– ஆண்கள்–1,12,073. பெண்கள்–1,17,525. மூன்றாம் பாலினம்–26, மொத்தம்–2,29,624. ஸ்ரீவில்லிபுத்தூர்– ஆண்கள்–1,16,223, பெண்கள்–1,21,004, மூன்றாம்பாலினம்–30. மொத்தம்–2,37,257.

சாத்தூர்–ஆண்கள்–1,15,388, பெண்கள்–1,21,288, மூன்றாம் பாலினம்–20. மொத்தம்–2,36,696. சிவகாசி–ஆண்கள் 1,19,951, பெண்கள்–1,26,379, மூன்றாம் பாலினம்–25, மொத்தம்–2,46,355.

விருதுநகர்–ஆண்கள் 1,03,981, பெண்கள்–1,08,090, மூன்றாம்பாலினம்–35. மொத்தம்– 2,12,106. அருப்புக்கோட்டை– ஆண்கள்–1,04,163, பெண்கள்–1,09,964, மூன்றாம் பாலினம்–17. மொத்தம்– 2,14,144. திருச்சுழி– ஆண்கள்–1,04,639, பெண்கள்–1,08,096, மூன்றாம் பாலினம்–9. மொத்தம்–2,12,744 ஆகும்.

Next Story