குடிநீர் கேட்டு சாலை மறியல் 20 பேர் மீது வழக்கு


குடிநீர் கேட்டு சாலை மறியல் 20 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 14 April 2019 3:00 AM IST (Updated: 14 April 2019 1:57 AM IST)
t-max-icont-min-icon

பேரையூர் அருகே குடிநீர் கேட்டு சாலை மறியலில் ஈடுபட்ட 20–க்கும் மேற்பட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

பேரையூர்,

பேரையூர் தாலுகாவிற்கு உட்பட்டது, ஏ.கிருஷ்ணாபுரம். இந்த கிராமத்தில் கடந்த சில வாரங்களாக குடிநீர் தட்டுப்பாடு இருந்து வருகிறது. இதனால் தங்களுக்கு சீராக குடிநீர் வழங்க வேண்டும் என்று ஏ.கிருஷ்ணாபுரம் கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் நேற்று கிராம மக்கள் பாண்டி என்பவர் தலைமையில் எழுமலை–சின்னகட்டளை சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

 இதுகுறித்து தகவல் அறிந்த சாப்டூர் போலீசார், மறியல் செய்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் கலைந்து செல்லவில்லை. இதனையடுத்து மறியல் செய்த பாண்டி உள்பட 20–க்கும் மேற்பட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


Next Story